The lion king movie review in tamil: 1994 ஆம் ஆண்டில் தி லயன் கிங் போன்ற படத்தை நாம் பார்த்ததும் இல்லை. குறிப்பாக கேள்விப்பட்டதும் இல்லை. அது நம்பகமான டிஸ்னியிலிருந்து வந்திருந்தபோதும் கூட அது சேக்ஸ்பியரின் நிழல்களுடன் ஒரு அசலான கதையைக் கொண்டிருந்தது. மிகவும் அன்பான விலங்குகள் மூலம் சொல்லப்பட்ட மிகவும் நெகிழ்ச்சியான மனித தன்மைகொண்ட இந்த கதை ஆப்பிரிக்காவின் வசீகரமான வனங்களில் மூழ்கடித்தது. அதில், அந்த விலங்குகளின் மிகப்பெரிய பாரம்பரிய அரசர்களில் ஒன்றை வெளிச்சத்திலும், மற்றொரு வில்லன் பாத்திரத்தை இருட்டிலும் என காட்சிப்படுத்தியிருப்பார்கள். இந்த படத்தை குழந்தையாக இருக்கும்போது பார்த்தவர்களுக்கு இப்போது அதே வயதில் குழந்தைகள் இருக்கின்றனர்.
இருப்பினும், பல ஆண்டுகள் ஆன பின்னரும் இந்தப் படத்தின் மீதான வசீகரம் அவர்களுக்கு இன்னும் குறையவில்லை. இவ்வளவு காலத்துக்குப் பிறகும், அந்த படத்தில் இடம்பெற்ற பாத்திரங்களான சிம்பா, நளா, முஃபாசா, ரஃபிகி, ஜஜு, திமோன் பும்பா ஆகியவற்றின் உருவ பொம்மைகளை தங்களுடைய வீட்டு அறைகளில் வைத்திருக்கின்றனர். மேலும், அவர்கள் அந்த நாட்களில் புகழ்பெற்ற அந்த பாடல்களை இப்போதும் புத்துணர்ச்சியுடன் பாடுகின்றனர்.
மேலும், தி லயன் கிங் படம் வருவதற்கு முன்பு ஆப்பிரிக்க பன்றியைப் பற்றியும் கீரிப்பிள்ளை பற்றியும் யாரும் கேள்விப்பட்டதில்லை என்பதையும் ஓநாய்களைப் போன்ற விலங்குகளை யாரும் நினைத்துகூட பார்த்ததில்லை என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.
நம்முடைய காலத்தில் உண்மையாகவே மேம்படுத்தப்பட்ட லயன் கிங் படம் மெருகூட்டப்பட்ட யதார்த்த போட்டோ பாணி அணுகுமுறையிலிருந்து கம்ப்யூட்டரில் உருவாக்கப்பட்ட காட்சிகள் தேவையா என்று கேட்டால் அதற்கு சிலர் ஆமாம் என்றும் இல்லை என்றும் கூறுகின்றனர்.
எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த படத்தை இயக்கிய ஜான் ஃபாவ்ரு கிட்டத்தட்ட தான் தொடுகிற எல்லாவற்றிலும் (தி ஐயன் மேன்) பெரும் மகிழ்ச்சியையும் வெற்றியையும் கொண்டுவந்துவிடுகிறார். தி ஜங்கில் புக் படத்தை திரும்ப எடுத்து ஆச்சரியப்படுத்திய ஜான் ஃபாவ்ரு டிஸ்னி நிறுவனத்தின் மிக முக்கியமான பணம் ஈட்டித்தரும் மெஷினாக இருக்கிறார். இந்த தி லயன் கிங் படத்தை ஜான் ஃபாவ்ரு தொழில்நுட்ப ரீதியாக மற்றொரு மேம்பட்ட நிலையில் உருவாக்கியுள்ளார். அதில் அவர் சிம்பா மற்றும் முஃபாசா ஆகிய தந்தை மற்றும் குட்டி சிங்கத்தின் தலை முடிகள் காற்றில் அசைவதை துல்லியமாக காட்டியுள்ளார்.
லயன் கிங் படத்தில் இப்போது அனைத்து முக்கிய கதாபாத்திரங்களுக்கும் நவ்ல்ஸ் போன்ற சூப்பர் ஸ்டார்கள் என அனைவரும் கருப்பின நடிகர்களே பின்னணி குரல் கொடுத்திருக்கின்றனர். இப்படி அனைவருமே கருப்பினத்தவர்களே பின்னணி குரல் கொடுத்திருப்பதை கூடாது என்று யாரும் வாதிட முடியாது. அந்த படத்தின் கதை ஆப்பிரிக்காவில் அமைக்கப்பட்டிருந்தாலும் அதைச் செய்யாததால் அது விமர்சனங்களை பெற்றது. ஆனால், தற்போது இந்த புதிய படத்தில், 1994 ஆம் ஆண்டில் வெளியான லயன் கிங் படத்துக்கு முஃபாசா பாத்திரத்துக்கு குரல் கொடுத்த ஜேம்ஸ் யேர்ல் ஜோன்ஸ் தவிர அனைவரும் புதியவர்களே பின்னணி குரல் கொடுத்திருக்கின்றனர்.
தி லயன் கிங் படத்தில் நிச்சயமாக பல சிங்கங்களின் இதயம் தேவை என்று நளா பாத்திரத்தின் பார்வையிலிருந்து சொல்லும்போது அதை மாற்றி மேலும் சிறப்பாக எடுக்கலாம் என்று கூறுவதெல்லாம் கொஞ்சம் அதிகம்தான்.
ஜான் ஃபாவ்ரு 1994 ஆம் ஆண்டில் வெளியான தி லயன் கிங் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ஒவ்வொரு பாடலையும் அப்படியே மறு ஆக்கம் செய்துள்ளா. இதனை ஜான் ஃபாவ்ரு தெரிந்தே செய்துள்ளார்.
இந்த படத்தில், சிம்பா, முஃபாசா மற்று ஸ்கார் பாத்திரங்களைத் தவிர மற்ற கதாபாத்திரங்களை மறு கற்பனை செய்ய தாராளமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட புதிய காட்சிகள், அதிகமான வசனங்கள், எல்லாம் நவ்ல்ஸின் உறுதியான நளாவிலிருந்து, ரோஜன் ஈச்னரின் பம்பா, திமோன், கீகன் மைக்கெல் கீ, எரிக் அண்ட்ரேஸின் கரடு முரண்டான பயமுறுத்தும் ஓநாய்கள் வரை எல்லாமே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.