/indian-express-tamil/media/media_files/k17rtNfpMUAjKN85NSDs.jpg)
பா.ரஞ்சித் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்துக்கு பாட்டில் ராதா எனப் பெயரிடப்பட்டுள்ளது.
பிரபல இயக்குனர் பா. ரஞ்சித்தின் நீலம் புரெடக்ஷன்ஸ், பலூன் பிக்சர்ஸ் உடன் இணைந்து தயாரிக்கும் புதிய படத்துக்கு பாட்டில் ராதா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தினகரன் சிவலிங்கம் என்ற அறிமுக இயக்குநர் டைரக்ஷன் செய்கிறார்.
It all starts with a Bottle ✨
— pa.ranjith (@beemji) June 24, 2024
Buckle up for a high like no other! It's going to be an entertaining ride!
Presenting you the first look of #BottleRadha 🍾
A film by @Dhinakaranyoji 💥💥💥I’m happy for you da❤️❤️💥
A @RSeanRoldan Musical
Starring @gurusoms@sanchana_n… pic.twitter.com/VsLJdy2cTH
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் திங்கள்கிழமை (ஜூன் 24) வெளியானது. அதில், மது பாட்டிலுக்குள் நடிகர் குருசோமசுந்தரம் அரியாசனம் அமைத்து அமர்ந்துள்ளார்.
அவரது கையில் மதுவை ஏந்தியபடி காணப்படுகிறார். படத்திற்கு ஷான் ரோல்டன் இசை அமைக்கிறார். இந்தப் படம் தமிழ், மலையாளத்தில் ரிலீசாகிறது.
நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில் முதலில் வெளியான படம் இயக்குனர் மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் படம்தான். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. மேலும் அரசியல் பரபரப்பையும் கிளப்பி இருந்தது.
இந்த நிலையில் நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில் இதுவரை 7 படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. 8வது படமாக பாட்டில் ராதா உருவாகிவருகிறது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.