26 வயதில் விஜய்க்கு ஜோடி: யார் இந்த நடிகை மீனாட்சி?

இவர் அவுட் ஆஃப் லவ் என்ற வெப் சீரிஸ் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். விஜய் ஆண்டனியின் கொலை படத்திலும், மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவர் அவுட் ஆஃப் லவ் என்ற வெப் சீரிஸ் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். விஜய் ஆண்டனியின் கொலை படத்திலும், மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
The pooja of the untitled Thalapathy 68 movie

தளபதி 68 படத்தில் விஜய் உடன் நடிக்க உள்ள நடிகை மீனாட்சி சௌத்ரி.

இயக்குனர் வெங்கட்பிரபு, நடிகர் விஜய் இணையும் தளபதி 68 படத்திற்கு இன்று பூஜை போடப்பட்டது. இந்தப் படத்தில் இரட்டை வேடத்தில் தந்தை மகனாக விஜய் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடிக்கிறார். பல் மருத்துவத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள மீனாட்சி, நீச்சல் மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை என பன்முகம் கொண்டவர் ஆவார்.

Advertisment

மேலும் இவர் மாடலிங்கிலும் கலந்துவந்தவர். 2017ல் மிஸ் ஐஎம்ஏ, 2018ல் பெமினா மிஸ் இந்தியா உள்ளிட்ட பட்டங்களையும் வென்றுள்ளார்.
இவர் அவுட் ஆஃப் லவ் என்ற வெப் சீரிஸ் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். விஜய் ஆண்டனியின் கொலை படத்திலும், மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

Advertisment
Advertisements

இதுதவிர கில்லாடி, ஹிட் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தற்போது தளபதி 68-ல் இணைந்துள்ளது மூலம் கவனிக்கப்படும் நடிகையாக உருவெடுத்துள்ளார்.
இதற்கிடையில் பேட்டி ஒன்றில் தாம் விஜய் ரசிகை என அவர் பேசிய காணொலிகள் தற்போது வைரலாகிவருகின்றன. இதனை விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Vijay

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: