விஜய் டி.வியில் ஒளிபரப்பாகிவரும் பாக்யலட்சுமி சீரியலின் இந்த வார பிரமோ வெளியாகி உள்ளது. இந்தப் பிரமோவில் கோபி மன உளைச்சலில் காணப்படுகிறார்.
அவர் ராதிகாவிடம் சண்டையிட்டுக்கொண்டு பாக்யா வீட்டிற்கு செல்கிறார். அதாவது தன்னுடைய வாழ்க்கையில் ராதிகா வந்தபின்னர்தான் தன்னுடைய வாழ்க்கையில் நிம்மதி போய்விட்டதாக கூறுகிறார்.
இதைக் கேட்டதும் ஆத்திரம் கொள்ளும் ராதிகா, அப்படியென்றால் என்னை டைவர்ஸ் செய்துவிட்டு முன்னால் குடும்பத்தினரே இணைந்து விடுங்கள் எனக் கூறுகிறார்.
அடுத்து தெய்வம் தந்த வீடு இருக்கு என கோபி மன உளைச்சலில் காணப்படுகிறார். இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என நினைத்த கோபிக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.
பாக்யலட்சுமி சிரியல் பெங்காலி சீரியலில் இருந்து ரீமேக் செய்யப்பட்டது ஆகும். ஆனால் அதற்கான எந்தச் சாயலும் தமிழ் தொடரில் இல்லை.
அந்த சீரியலை இயக்குனர் பார்த்து பக்குவமாக எடுத்துள்ளார். தமிழ்நாட்டின் முன்னணி சீரியல்களில் இதுவும் ஒன்றாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“