சூர்யா நடிப்பில் கடைசியாக எதற்கும் துணிந்தவன் படம் வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில், கடந்த ஒரு வருமாக சூர்யா நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை.
2024-ம் ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும் கங்குவா, தமிழ் சினிமாவில் அடுத்த டிரெண்செட்டராக மாறும் என்று கூறப்படுகிறது.
இப்படத்தில் ஒரு போர் காட்சிக்கு 10000 பேர் பயன்படுத்தப்பட்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது, இது சூர்யா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாபி தியோலுடன் நடிகர் சூர்யா மற்றும் 10,000 க்கும் மேற்பட்ட வீரர்களுடன் ஒரு பிரமாண்டமான போர் காட்சியை இயக்குனர் சிவா படமாக்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்த படம் 24 மொழிகளில் வெளியாக உள்ளதாகவும் தெரிவித்து வருகிறார். கங்குவா, பாலிவுட் நடிகர் பாபி தியோல் மற்றும் டிஷால் பதானியின் தமிழ் அறிமுகமாகும் படமாகும்.
இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். அதன்படி படம், ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“