நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற படம் பாகப் பிரிவினை. இந்தப் படத்துக்கு முன்பு கண்ணதாசனும், சிவாஜி கணேசனும் சண்டையிட்டு பிரிந்துவிட்டனர்.
இதனால் என் பாட்டுக்கு கண்ணதாசன் பாடல்கள் எழுதக் கூடாது என சிவாஜி கணேசன் கூறிவிட்டார். அதேபோல் கண்ணதாசனும் சிவாஜிகணேசன் படங்களுக்கு பாடல்கள் எழுதமாட்டேன் எனத் தெரிவித்து விட்டார்.
இதனை விழா ஒன்றில் நினைவு கூர்ந்த வைரமுத்து, “கண்ணதாசனும், சிவாஜி கணேசனும் சண்டையிட்டு பிரிந்த தினத்தில் பாகப் பிரிவனை படத்தின் சூட்டிங் நடைபெற்றது. இந்தப் படத்தில் நாயகன், உடல் நலிவுற்ற நிலையில் இருப்பார்.
அப்போது அவருக்கு ஒரு மகன் பிறப்பார். அந்த நேரத்தில் ஒரு தாலாட்டு பாடல் தேவை. இதற்கு பாடல் எழுத பட்டுக்கோட்டை கலியாண சுந்தர்ததை அழைத்தார்கள். அவர் இதனை கேட்டுவிட்டு என்னால் இந்த சுட்டிவேசனுக்கு தகுந்தால்போல் பாடல் எழுத முடியாது.
இது அண்ணன் கண்ணதாசனால்தான் முடியும். நீங்கள் அவரை கேட்டுப்பாருங்கள் என சொல்லிவிட்டார். இதையடுத்து இயக்குனர் பீம் சிங் கண்ணதாசனை சந்தித்த சுட்டிவேசன் சொல்லி பாடல் எழுத கேட்டுக்கொண்டார்.
அப்போது உருவான பாடல்தான் ஏன் பிறந்தாய் மகனே, ஏன் பிறந்தாயோ? அந்தப் பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஹிட் அடித்தது.
இந்தப் பாடலை கேட்ட சிவாஜி கணேசன், “கண்ணதாசனுக்கு நிகர் கண்ணதாசன்” என்றார். உடனே பகை தீர்ந்தது. இந்தப் பகையை தீர்த்தது தமிழ்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“