அருள்நிதி நடிப்பில் வெளியாக உள்ள ‘டிமான்டி காலனி 2’ திரைப்படத்தின் முன்னோட்ட காட்சிகள் அதன் தயாரிப்பு நிறுவனத்தின் ஐ.டி ஊழியர்களுக்கு கோவை பிராட்வே திரையரங்கில் பிரத்தியேகமாக திரையிடப்பட்டது.
‘டிமான்டி காலனி 2’ படத்தைப் பார்க்க பேய் (கோஸ்ட்) வேடத்தில் வந்த ஊழியர்கள் நடனமாடி கொண்டாடினர்.
ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’, அருள்நிதி நடிப்பில் ‘டிமான்டி காலனி-2’ மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘ரகு தாத்தா’ உள்ளிட்ட 3 திரைப்படங்கள் வெளியாகிறது.
இந்நிலையில் ‘டிமான்டி காலனி 2’ தயாரிப்பாளரின் ஐடி நிறுவன ஊழியர்கள் 450 பேருக்கு கோவை பிராட்வே திரையரங்கில் பிரத்தியோகமாக அதன் முன்னோட்ட காட்சிகள் திரையிடப்பட்டது.
‘டிமான்டி காலனி-2’ திரைப்படம் வெளியாவதையொட்டி முன்னோட்டக் காட்சிகளை பார்க்க வந்த ஐ.டி ஊழியர்கள் ‘கோஸ்ட்’ (GHOST) வேடம் அணிந்தும், அத்திரைப்படத்தின் பாடலுக்கு நடனமாடியும் கொண்டாடினர்.
இதையடுத்து திரைப்படத்தின் தயாரிப்பாளர் பாபி பாலச்சந்திருடன் சேர்ந்து 450"ஐ.டி ஊழியர்கள் திரைப்படத்தை பார்த்தனர்.
செய்தி: பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“