சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் லியோ வெற்றிவிழா கொண்டாட்டம் நாளை (நவ.1) நடைபெறுகிறது. இந்த வெற்றி விழா நிகழ்ச்சியில் விஜய் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை; விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மட்டும் அனுமதிக்கப்பட உள்ளனர்.
இதனால், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் 6 ஆயிரம் பேர் இதில் கலந்துகொள்கின்றனர்.
இவர்கள் தங்களின் விஜய் மக்கள் இயக்க அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் ஆன்லைனில் முன்பதிவு செய்திருக்க வேண்டும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
மேலும் அரங்க வளாகத்துக்குள் உறுப்பினர் அட்டைய சரிபார்த்த பின்னரே இவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த நிலையில், வெற்றி விழா தொடர்பான முன்னோட்ட வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
அதில், “தளபதியோட குட்டி ஸ்டோரி இல்லாம எப்படி நண்பா..! லியோவின் மன்னிக்கவும் பார்த்திபனின் மொத்த குடும்பமும், மொத்த படக்குழுவும் வருகிறார்கள்” எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும், இந்த வாட்டி மிஸ் ஆகாது எனவும் கூறப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படம் இதுவரை 7 நாட்களில் 461 கோடி ரூபாய் வசூலை பெற்றதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து உள்ளது.
அதேநேரத்தில், 12 நாள்களில் சர்வதேச அளவில் 540 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. லியோ வெற்றி விழா கொண்டாட்டத்துக்கு காவல்துறை பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“