13 வயதில் சினிமா அறிமுகம்; உடன் பிறந்த அண்ணனுக்கு காதலியான தங்கை: இந்த படத்திற்கு ஏகப்பட்ட எதிர்ப்பு!

நடிகை மீனு மும்தாஸ், தனது தந்தையின் குடிப்பழக்கத்தால் குடும்ப சுமையை ஏற்று, 13 வயதிலேயே நடிப்புத் துறைக்கு வந்தார். 1950-60களில் பிரபலமாக இருந்த அவர், தனது அண்ணன் மெஹ்மூத்துடன் இணைந்து 'ஹவுரா பிரிட்ஜ்' படத்தில் காதலர்களாக நடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

நடிகை மீனு மும்தாஸ், தனது தந்தையின் குடிப்பழக்கத்தால் குடும்ப சுமையை ஏற்று, 13 வயதிலேயே நடிப்புத் துறைக்கு வந்தார். 1950-60களில் பிரபலமாக இருந்த அவர், தனது அண்ணன் மெஹ்மூத்துடன் இணைந்து 'ஹவுரா பிரிட்ஜ்' படத்தில் காதலர்களாக நடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

author-image
WebDesk
New Update
Meenu Mumtaz

13 வயதில் சினிமா அறிமுகம்; உடன் பிறந்த அண்ணனுக்கு காதலியான தங்கை: இந்த படத்திற்கு ஏகப்பட்ட எதிர்ப்பு!

பொதுவாக, சினிமாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக நடித்திருப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், நிஜத்தில் அண்ணன்-தங்கையாக இருந்தவர்கள், திரையில் காதலர்களாக நடித்த அரிய நிகழ்வு நடந்திருக்கிறது. பிரபல நடனக் கலைஞரும் நடிகையுமான மீனு மும்தாஸ் மற்றும் அவரது அண்ணன் நடிகர் மெஹ்மூத் ஆகியோரின் வாழ்க்கையில் இது நிகழ்ந்துள்ளது. அதைப்பற்றி பார்ப்போம்.

சினிமா வாழ்க்கையின் ஆரம்பம்

Advertisment

மீனு மும்தாஸ் (மாலிகுன்னிசா அலி), பிரபல நடிகர் மும்தாஸ் அலியின் மகளாவார். தந்தையின் குடிப் பழக்கத்தால் குடும்பப் பொறுப்பு மீனுவின் தோள்களில் விழுந்தது. தனது 13-வது வயதிலேயே 'ஹக்கீம்' என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் மீனு. தனது தாயாருக்கு இதில் விருப்பம் இல்லை என்றாலும், குடும்பத்தின் நிலைமை காரணமாக தொடர்ந்து திரைப்படங்களில் நடித்தார். அதுமட்டுமின்றி மீனு தனது 14-வது வயதிலேயே அடுத்தடுத்து வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

சர்ச்சையை ஏற்படுத்திய காட்சி

1950 மற்றும் 1960களில் திரைப்படத்துறையில் தீவிரமாகப் பணியாற்றி வந்த மீனு, 'ஹவுரா பிரிட்ஜ்' என்ற படத்தில் தனது அண்ணனான நடிகர் மெஹ்மூத்துடன் காதலியாக இணைந்து நடித்தார். அந்தப் படத்தில் இடம்பெற்ற "கோரா ரங் சுனாரியா காளி" என்ற பாடலில் அண்ணனும் தங்கையும் காதலர்களாகத் தோன்றினர். குடும்பச் சூழ்நிலை காரணமாக அந்த வேடத்தை ஏற்றுக்கொண்டதாக மீனு கூறினாலும், பாடல் வெளியானதும் பெரும் சர்ச்சை வெடித்தது. நிஜத்தில் உடன் பிறந்த அண்ணன்-தங்கை எப்படி காதலர்களாக நடிக்கலாம் என்று மக்கள் படத்திற்கு எதிராக வீதிகளில் போராட்டம் நடத்தினர்.

Minu

வாழ்க்கையும் மறைவும்

Advertisment
Advertisements

இந்த சர்ச்சைகளுக்குப் பிறகு, மீனு இயக்குநரைத் திருமணம் செய்து கொண்டு, சினிமாவில் இருந்து விலகி வெளிநாட்டில் குடியேறினார். கனடாவில் வசித்து வந்த அவருக்கு, 2003-ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது, அவருக்கு ஞாபக மறதி நோய் ஏற்பட்டிருப்பதும், அது அவரது மூளையில் 15 ஆண்டுகளாக வளர்ந்துவந்த கட்டி காரணமாக நிகழ்ந்திருப்பதும் மருத்துவர்களால் கண்டறியப்பட்டது. சிகிச்சை பெற்று மீனு குணமடைந்தாலும், 2021ம் ஆண்டு மீனு மும்தாஸ் காலமானார். 

Entertainment News Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: