திருப்பதி கணேசா கோவிந்தா; சிவாஜி போஸ்டரில் சாணி அடித்த மக்கள்; சிவகுமார் ஃப்ளாஷ்பேக்

மறைந்த பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசனின் வாழ்க்கை மற்றும் திரைப் பயணம் குறித்து தமிழ் திரைப்பட மூத்த நடிகர் சிவகுமார், பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

மறைந்த பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசனின் வாழ்க்கை மற்றும் திரைப் பயணம் குறித்து தமிழ் திரைப்பட மூத்த நடிகர் சிவகுமார், பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
sivaji sivakumar

தமிழ் திரைப்பட மூத்த நடிகர் சிவகுமார், மறைந்த பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசனின் வாழ்க்கை மற்றும் திரைப் பயணம் குறித்த பல சுவாரசியமான தகவல்களை 2018-ல் நடந்த ஈரோடு புத்தகத் திருவிழாவில் கூறியிருந்தார். இந்த வீடியோ இந்தியாக்ளிட்ஸ் தமிழ் யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்டுள்ளது. 

Advertisment

நிகழ்ச்சியில் பேசிய சிவக்குமார், நடிகர் சந்திரபாபு இயக்கிய 'அப்துல்லா' என்ற படம் நிதி நெருக்கடி காரணமாக நின்றுபோனது. அந்தக் கதை, பின்னர் சிவாஜி கணேசன் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற 'பாவமன்னிப்பு' திரைப்படமாக மாறியது. 1957-ம் ஆண்டு சேலத்தில் நடந்த நாடகம் ஒன்றில் கலந்துகொண்ட பிரபல பாடகி லதா மங்கேஷ்கர், சிவாஜி கணேசனின் நடிப்பைக் கண்டு வியந்து, "என் வாழ்நாள் முழுவதும் நீங்கள் என் சகோதரர்" என்று கூறி அவருடன் தங்கை உறவை ஏற்படுத்திக்கொண்டார்.

'கட்டபொம்மன்' படத்தில் வெள்ளையத்தேவன் கதாபாத்திரத்தில் நடிக்க எஸ்.எஸ்.ராஜேந்திரன் வராததால், வாய்ப்பு ஜெமினி கணேசனுக்கு கிடைத்தது. அவரது மனைவி சாவித்திரி கர்ப்பிணியாக இருந்ததால் அவர் தயங்கியபோது, சாவித்திரியிடம் சிவாஜி கணேசன் பேசினார். உடனே சாவித்திரி, "என் அண்ணன் சொல்லியிருக்கிறார், உடனே கிளம்புங்கள்" என்று ஜெமினி கணேசனைச் செல்லச் சொன்னார் 

'பாசமலர்' படத்தின் உச்சக்கட்டக் காட்சியை லதா மங்கேஷ்கர் பார்த்தபோது, மிகவும் உணர்ச்சிபூர்வமாக இருந்ததால் அவர் மயக்கமடைந்தார். மேலும், நிஜ வாழ்க்கையில் ஒரு தயாரிப்பாளரின் மகள் தனது தந்தை இறந்த அதிர்ச்சியில் இறந்த உண்மைக் கதையையும் இதனுடன் ஒப்பிட்டு சிவகுமார் பேசினார்.

Advertisment
Advertisements

1957-ம் ஆண்டு ஜனவரியில், பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளைப் பின்பற்றிய சிவாஜி கணேசன், தனது பட வெற்றியைக் கொண்டாடும் விதமாக திருப்பதி கோவிலுக்குச் சென்றுள்ளார். இது "திருப்பதி கணேசா கோவிந்தா" என்ற தலைப்புடன் தமிழ்நாடு முழுவதும் போஸ்டர்கள் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டது. அப்போது, சிவாஜி போஸ்டரில் மக்கள் சாணி எடுத்து அடித்தனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

1961-ல் 'கட்டபொம்மன்' திரைப்படம் தென்கிழக்கு ஆசியாவின் சிறந்த படமாக அங்கீகரிக்கப்பட்டது. அப்போது, விருது விழாவில் கலந்து கொள்ளச் சென்ற நடிகை பத்மினிக்கு மருத்துவ சான்றிதழ் இல்லாததால் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். பிறகு அவர் தனது சகோதரி ராகினியுடன் இடமாறி விழாவுக்குச் சென்றார். அங்கு, படத்தின் காட்சி 40x60 அடி திரையில் காட்டப்பட்டபோது அவருக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. இவ்வாறு சிவக்குமார் கூறினார்.

Entertainment News Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: