எங்க அம்மா நடிக்கதான் சொன்னாங்க, நான் உண்மையா கட்டிபிச்சுட்டேன்; கடைசில எல்லாம் போச்சு; வனிதா முதல் பட அனுபவம்!

நடிகர் விஜய்யை உண்மையாகவே காதலித்தேன் என நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில் பங்கேற்ற சினிமா எக்ஸ்பிரஸ் யூடியூப் சேனல் நடத்திய நேர்காணல் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். 1995-ல்வெளியான "சந்திரலேகா" என்ற படத்தில் விஜய்க்கு ஜோடியாக  வனிதா நடித்திருந்தார்.

நடிகர் விஜய்யை உண்மையாகவே காதலித்தேன் என நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில் பங்கேற்ற சினிமா எக்ஸ்பிரஸ் யூடியூப் சேனல் நடத்திய நேர்காணல் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். 1995-ல்வெளியான "சந்திரலேகா" என்ற படத்தில் விஜய்க்கு ஜோடியாக  வனிதா நடித்திருந்தார்.

author-image
WebDesk
New Update
Vanitha VIjaykumara

எங்க அம்மா நடிக்கதான் சொன்னாங்க, நான் உண்மையா கட்டிபிச்சுட்டேன்; கடைசில எல்லாம் போச்சு; வனிதா முதல் பட அனுபவம்!

நடிகை வனிதா விஜயகுமார், நடிகர் விஜய்க்கு ஜோடியாக 1995-ம் ஆண்டு வெளியான "சந்திரலேகா" படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். அன்று இளம் வயது விஜய் மற்றும் வனிதா இணையின் கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. சில படங்களில் நடித்த பிறகு திரையுலகிலிருந்து விலகிய வனிதா, பின்னர் 'தேவி', 'நான் ராஜாவாகப் போகிறேன்', 'அநீதி' போன்ற பல படங்களில் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். பவர் ஸ்டாருடன் இணைந்து 'பிக்கப்ட்ராப்' படத்திலும் நடித்தார். பல வருடங்களுக்குப் பிறகு, தற்போது மீண்டும் தீவிரமாக நடித்து வருகிறார். நடன மாஸ்டர் ராபர்ட்டுடன் இணைந்து நடித்த 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

Advertisment

'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற வனிதா விஜயகுமார், தான் நடித்த முதல் படமான "சந்திரலேகா" குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். எக்ஸ்பிரஸ் யூடியூப் சேனல் நடத்திய நேர்காணல் ஒன்றில், "சந்திரலேகா படப்பிடிப்பின்போது நடிகர் விஜய்யை உண்மையாகவே காதலித்தேன்" எனக் கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அந்தப் படத்தில் இடம்பெற்ற சில காதல் காட்சிகள் மிகவும் தத்ரூபமாக அமைந்திருக்கும். இதற்குக் காரணம் என்ன என்பதையும் வனிதா தெளிவுபடுத்தினார். "அந்தப் படத்தில் நடித்தபோது, தத்ரூபமாக சில காதல் காட்சிகளில் நடிப்பதற்கு, உண்மையாகவே விஜய்யைக் காதலிப்பது போல் உணர்ந்து நடித்தேன்" என்று அவர் தெரிவித்தார்.

இது ஒரு நடிகையின் கதாபாத்திர அர்ப்பணிப்புக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. திரையில் ஒரு காட்சியின் உணர்வுகளை முழுமையாக வெளிப்படுத்த, நடிகர் எவ்வளவு தூரம் அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்கிறார் என்பதை வனிதாவின் இந்த வெளிப்பாடு உணர்த்துகிறது. "சந்திரலேகா" திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் கடந்த பின்னரும், அப்படத்தின் காதல் காட்சிகள் பலரால் நினைவுகூரப்படுவதற்கும், ரசிக்கப்படுவதற்கும், வனிதா அன்று வெளிப்படுத்திய அந்த 'உண்மையான' உணர்வு ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கக்கூடும்.

Vanitha Vijayakumar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: