/tamil-ie/media/media_files/uploads/2020/01/a939.jpg)
The Wonder Woman A pictorial tribute to Fearless Nadia on her 111th birth anniversary - ஆச்சர்யப் பெண்மணி நாடியா; 111-வது பிறந்த ஆண்டு நினைவாக படக்கதை வழியாக அஞ்சலி
கோயம்பேடு திணறுகிறது: பொங்கல் பண்டிகையின் போது நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகள்..
1. விஷால் பரத்வாஜின் ரங்கூன் (2017), திரைப் படத்தில் கங்கனா ரனாவத் ஜூலியாவாக நடித்தார். 1940-களில் பெரும்பாலான உலகநாடுகள் போரின் தீவிரத்தில் இருந்ததன. இந்தியாவில் விடுதலை போராட்டம் தீவிரமாக நடைபெற்று வந்தது. ஜூலியாவின் காதலர் தயாரிப்பாளர் ருஷி பிலிமோரியாவை நேர்த்தியாக உருவாக்கியவர் ஷாயிப் அலி கான். ஜூலியாவாக நடிப்புத் திறனுடன், ருஷி, பிரிட்டிஷ் படைகளுடன் நெருங்கி பழகுவார். இந்த இருவரும் இந்தியா இதுவரை பார்த்திராத மிகவும் உற்சாகமான, சண்டை படங்களை உருவாக்கவதற்காக படைகளில் சேர்ந்தனர். ரனாவத்தின் மிஸ் ஜூலியா, சினிமா கண்டுபிடிப்பு அல்ல. அவரது பாத்திரம், உண்மை வாழ்க்கை அடிப்படையிலானதாகும். அவர் வேறு யாரும் அல்ல, 1930- முதல் 1950 வரை இந்தி சினிமாக்களில் வீர, தீர சண்டை காட்சிகள் மூலம் ஒரு புகழ்பெற்ற வீர ராணியாக இந்தி சினிமாவை ஆட்சி செய்த, வீரத்தின் சின்னமான நாடியாதான் அவர். 1968ம் ஆண்டின் கடைசி வரை நடித்தவர், அவரது நாட்களில் பிரபலமான நபராக, எதிர்நாயகர்களுக்கு மரண பயம் கொடுப்பராக இருந்தார்.
தான் ஒரு வசூல் ’மன்னன்’ என்பதை மீண்டும் நிரூபித்த ரஜினி!
தமது புகழ்பெற்ற திரைப்படமான ஹந்தர்வாலி என்ற பெயரில் அழைக்கப்பட்ட நாடியா, மேரி ஆன் ஈவான்ஸ் என்ற பெயரில் 1908-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் பிறந்தவர். திரை உலகில் பாக்ஸ் ஆபீஸை நோக்கி ரசிகர்களை இழுத்தவர், இதற்கு காரணம், மிகவும் அபாயகரமான சண்டைக்காட்சிகளில் கூட தமக்குப் பதிலாக ஸ்டண்ட் நடிகர்களைக் கொண்டு டூப் போட்டுக்கொள்ளாமல் தாமே நடித்தவர். கவர்ச்சிகரமான தோற்றம் கொண்டவர். ஆண் ஆதிக்கம் செலுத்தும் உலகில் ஒரு ஹீரோவாக திகழ்ந்தவர். அவர் ஒரு நட்சத்திரம், ஸ்டண்ட் பெண்மணி, குதிரை வீரர், எதிரியைத் துரத்திப் பிடிக்க கூரை ஏறுபவர், சண்டைகாட்சிகளில் டைவ் அடிப்பவர் ஒரே பாத்திரத்தில் அனைத்தையும் செய்பவர். முகமுடி அணிந்து கொள்வார், ஆண்களை கூர்மையாகத் தாக்கி, அவர்களைப் பறக்க விடுவார். ஓடும் ரயிலின் கூரை மீது ஓடுவார். சிங்கங்களை தமது செல்லப்பிராணியாக்குவார். சுருக்கமாக, உங்களுக்கான துணிச்சலான நாடியா அவர். இந்திய சினிமாவின் வழக்கத்துக்கு மாறான, நட்சத்திரம் அவர்.
ஸ்காட்லாந்து-ஆஸ்திரேலிய வீரர், ஒரு காலத்தில் கோரஸ் பாடுபவராகவும், சர்கஸ் சாகச பெண்மணியாகவும் இருந்த கிரேக்க நாட்டைச் சேர்ந்த பெல்லி நடன பெண்மணிக்குப் பிறந்தவர் நாடியா.
திரைப்படத்தயாரிப்பாளர் ஜாம்ஷெட் ஜேபிஎஃச் வாடி, அவரது வருங்கால கணவர் ஹோமி வாடியா ஆகியோரை சந்தித்த பின்னர்தான் நாடியாவின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது. வாடியா சகோதரர்கள் ஏற்கனவே, பொழுதுபோக்குக் காட்சி தொழிலில் ஒரு பெயரை உருவாக்கி இருந்தனர். நாடியா என்ற இளம் பெண்ணுக்குள் இருந்த திறமைகளை கண்டறிந்து அவரை இந்துஸ்தானி கற்றுக் கொள்ளும்படி இவர்கள் ஊக்குவித்தனர். ஹந்தர்வாலி என்ற படத்தில் கதாநாயகியாக அவரை அறிமுகப்படுத்தும் முன்பு, சில சின்ன பாத்திரங்களில் அவரை நடிக்க வைத்தனர். 1935ம் ஆண்டு வெளியான ஹந்தர்வாலி பெரும் வெற்றி பெற்றது. இந்திய ரசிகர்களிடம் ஒரு கோபக்கார துணிச்சலான நாடியா கவாக அவரை உருவாக்கியது.
நாடியா மீதான ரசிகர்களின் காய்ச்சல், 1940கள் வரை நன்றாக இருந்தது. பஞ்சாபி மெயில், டைமண்ட் குயின், ஜங்கிள் பிரின்சஸ், பம்பாய்வாலி என்று தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்தார். 1950களில் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். எனினும் இறுதியாக 1968-ம் ஆண்டு ஒரு படத்தில் நடித்தார். ஜேம்ஸ்பாண்ட் ஸ்டைலில் கஹிலரி என்ற படத்தை ஹோமி வாடியா உருவாக்கினார். வாழும் தீப்பந்து என்ற குறியீட்டுப் பெயரில் நாடியா அழைக்கப்பட்டார். இந்தப் படத்தில் அவர் நடித்தபோது அவருக்கு 59 வயது. கடந்த காலத்தில் முதன்மையாக இருந்தபோதிலும், ரேஸ் குதிரைகளின் மீது விருப்பம் கொண்டிருந்தார். அதோடு, பரபரப்பான சமூக வாழ்க்கையிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். அவரது உண்மை வாழ்க்கையிலும் கூட, துணிச்சலான சுறுசுறுப்புக்கொண்டவராக இருந்தார். 1993-ல் அவரது பெரிய மருமகன் மறைந்த ரியாத் வாடியா(ஜாம்ஷெத் பேரன்), நாடியாவின் வாழ்க்கையை கொண்டாட ஒரு டாக்குமெண்ட்ரி படம்தயாரித்தார்.
இந்த ஆவணப்படம், நாடியாவை அவரது நடிப்பை அறிந்திராத புதிய தலைமுறைக்கு அறிமுகம் செய்வதாக இருந்தது. உலகம் முழுவதும் திரைப்படவிழாக்களில் ஆவணப்படம் திரையிடப்பட்டது. எனவே, வெளிநாடுகளில் அறிமுகம் செய்யும் வகையிலும் இது இருந்தது. நாடியா தமது 88 வது வயதில் 1996-ம் ஆண்டு இறந்தார்.
பாலிவுட்டின் உண்மையான ஸ்டண்ட் நட்சத்திரம் நடித்த படங்கள் குறித்து அப்பட்டமான பெண்ணியவாதிகள் அவ்வளவாக பாராட்டவில்லை. தவிர, விமர்சகர்களால் கவனிக்கப்படவும் இல்லை. எழுத்தாளர் டோரத்தி வென்னர் துணிச்சலான நாடியா என்ற (ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட இந்தப் புத்தகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது)அவரது புத்தகத்தில் இது குறித்து விவாதித்துள்ளார். “இந்த முறை குறித்து, அவரின் நீண்ட திரை உலக வாழ்க்கையின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து அவர் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தெளிவாக, பெண்களின் சம உரிமைக்காக போராடினார். இந்த சம உரிமை இன்றைய கண்ணோட்டத்தில் மிகவும் நவீன மற்றும் மிகவும் எழுச்சியூட்டும் வகையில் வந்திருக்கிறது” என்று சொல்லி இருக்கிறார். நாடியாவின் நடிப்புத்திறனைப் பற்றி, “சிற்றின்பம் , முற்போக்கான கருத்துக்களைக் கொண்ட மின்னும் கலவையான நடிப்பு” என்று சொல்லி இருக்கிறார். வென்னர், ரியாத் உடன் இணைந்து இந்த புத்தகத்தை எழுதினார்.
நாடியாவின் 111வது பிறந்த ஆண்டின் தருணத்தை முன்னிட்டு, அவரது மருமகனின் மகன் ராய் வாடியா, துணிச்சலான நடியாவின் வழக்கத்துக்குமாறான வாழ்க்கை குறித்து அறிந்து கொள்ள குடும்பத்தின் வரலாற்றுப் பதிவுகளுக்கு நம்மை அழைத்துச் செல்கிறார்.
2. ஹந்தர்வாலி (1935)-யின் போஸ்டர்; இந்தத் திரைப்படம் நாடியாவின் உற்சாகத்தை அறிமுகப்படுத்தியது. “தவிர, தேஸ் தீபக் என்ற படத்தில் ஒரு அடிமைப்பெண்ணாக, ஒரு சிறிய பாத்திரத்தில் பார்வையாளர்களிடம் புகழை நிரூபித்திருந்தார். மேலும் அப்போது நூர்-இ-யாமான் என்ற திரைப்படத்தில் பரிஜாத் இளவரசியாகவும் நடித்தார்” என்கிறார் நாடியாவின் மருகமனின் மகனான ராய் வாடியா. வாடியா மூவிடோன் நிறுவனர் ஜே.பி.எச் வாடியா, இந்த திரைப்படங்களில் அவரை நடிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். பொன்னிறமான மயக்கும் கவன ஈர்ப்புக் கொண்ட அவர், இந்திய சினிமாவுக்கு ஏற்றவர் என்று அவர் கருதினார். ஹந்தர்வாலி நம்பிக்கையின் ஒரு பெரிய பாய்ச்சலாக இருந்தது. கவர்ச்சியான பேண்ட், இறுக்கமான கோட் போட்ட முன்னணி பெண் பாத்திரம், வில்லத்தனம் செய்பவர்கள், குண்டர்களிடம் இருந்து விடுதலைபெற சாட்டையை கையில் வைத்திருப்பவராக நாடியா நடித்தார். முதலில் இந்தப்படத்துக்கு நிதி தருவதாகச் சொன்ன பைனான்சியர் பின் வாங்கியதால், ஜே.பி.எச் வாடியா மற்றும் அவரது இளைய சகோதரர், பல்வேறு தரப்பில் இருந்து பணத்தைப் பெற்றனர். அது ஒரு அபாயகரமான சூழலாக இருந்தது. எனினும், படம் வெளிவந்தபோது ரசிகர்கள் படத்தை விரும்ப ஆரம்பித்தனர். நாடியாவின், ஹந்தர்வாலியின் ஆளுமைக்குள் ஈர்க்கப்பட்டனர்(புகைப்படம்; வாடியா மூவிடோன், ராய் வாடியா)
3. ஜங்கிள் பிரின்சஸ்(1942) படத்தில் சிங்கங்களுடன் ஒரு புகழ்பெற்ற காட்சி; “ஆரம்பத்தில் அவர் பயந்தார்,” என்று சிரிக்கிறார் ராய் வாடியா. “எனினும் அவர் மிருகங்களுடன் பழகினார். அதே போல மிருகங்களுடன் அவருடன் பழகின” (புகைப்படம்; வாடியா மூவிடோன், ராய் வாடியா)
4. நாடியா, மிக எளிதில் மேற்கத்திய உடைகளில் இருந்து இந்திய சேலைக்கும், இதர உடைகளை அணிவதற்கும் பழகிக்கொண்டார். பொதுவாக ஒரு திரைப்படத்தின் முடிவில், அவரது பாத்திரம் வீட்டுக்கு பயணிக்க விரும்புவதாக இருக்கும். இந்தப் புள்ளியில், அவர் நல்ல ஒரு இந்தியப்பெண்ணாக இருந்தார்(அவர் ஆஸ்திரேலியாவில் பிறந்தவர்). அவர் ஒரு வெண்மையான, பொன்னிறமான பெண்ணாக இருந்தபோதிலும் கூட, அவரது ஆளுமைக்குள் ஈர்க்கப்பட்டு ஒவ்வொன்றையும் உள்ளடக்கிய எல்லாவற்றையும் வழிபடும் ரசிகர்களுக்கு பொருட்டாக இல்லை” என்கிறார் வாடியா. மேலும் அவர் கூறுகையில், “இந்த இரண்டு கூறான முரண்தான் அவரது வெற்றியின் இதயமாக இருந்தது.” (புகைப்படம்; வாடியா மூவிடோன், ராய் வாடியா)
5. ரோல்ஸ் ராய்ஸ் கி பேட்டி என்று அழைக்கப்படும் கார்; குதிரைகளைப் போலவே, கார்களும் வாடியா மூவிடோன் தயாரிக்கும் படங்களில் சண்டை காட்சிகளில் நாடியா மற்றும் இதர நடிகர், நடிகையர் நடிக்கும் படங்களில் முக்கிய பங்கு வகிக்கும். இதில் ‘ரோல்ஸ் ராய்ஸ் கி பேட்டி’ கார் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பல படங்களில் இந்த கார் தோன்றியிருக்கிறது. கதையின் கதாநாயகர் காரில் துரத்திச் செல்லும் காட்சிகள், நகைச்சுவை காட்சிகளிலும் இடம் பெற்றுள்ளது. “சிக்கலான தருணங்களில் இந்த கார் தானாக ஓடும். ஸ்டீரிங்க் வீல், இதர முக்கிய பகுதிகள் இல்லாவிடாலும் கூட ஓடும்.” (புகைப்படம்; வாடியா மூவிடோன், ராய் வாடியா)
6. சண்டைக்காட்சிகள், வன்முறை காட்சிகள் நாடியா-வாடியா மூவிடோன் யுனிவர்சில் மிகவும் கவனமாக படமாக்கப்படும். ராய் கூறுவதின் படி, நாடியா மற்றும் இதர நடிகர்கள் ஜாஷெட் மற்றும் ஹோமியின் ஆலோசனையின் பேரில் தங்களுக்குள் மிகவும் கடுமையாக பயிற்சி மேற்கொள்வார்கள். நாடியா மற்றும் அவருடன் காட்சிகளில் நடிப்பவர்கள் அனைத்து சண்டை காட்சிகளையும் தாங்களே செய்வர். அவர்கள் டூப் கூட போட்டுக்கொள்ள மாட்டார்கள். சில நேரம் பெரும் அபாயங்களில் கூட தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். “இன்றைக்கு உள்ள நடிகர்கள், வாடியாவும், அவருடன் நடிப்பவர்களும் செய்வதைப் போல துணிச்சலாக நடிக்கமாட்டார்கள். நம்பகத்தன்மைதான் இந்த படங்களில் இது போன்ற போன்ற குத்து சண்டை காட்சிகளை அனுமதிக்கிறது, எனவே இது பேசப்படுகிறது. இது உண்மை என்று ரசிகர்களுக்கு தெரியும். அதுவே அதன் மாயம்,” என்று விவரிக்கிறார் ராய் வாடியா. (புகைப்படம்; வாடியா மூவிடோன், ராய் வாடியா)
7. நாடியா அல்லது மேரி ஆன் ஈவான்ஸ், ஹோமி வாடியா மிகவும் விரும்பும் திருமண நாள்; அவர்களுடைய காதல் கதை கசப்பும், இனிப்பும் சேர்ந்த கலவை என்று சொல்கிறார். “பார்சி சமூகத்தைச் சேர்ந்த ஹோமியின் தாய் துன்மாயின் எதிர்ப்புக் காரணமாக பத்தாண்டுகளாக மேரியை அவரால் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. எனினும், அந்த எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் ஜாம்ஷெட், ஜே.பி.எச் வாடியா இருவரும் அவர்களை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினர். அவர்களை தாங்கள் ஆதரிப்பதாகவும் கூறினர். ஆனால், தாய் இறந்த பிறகுதான் ஹோமி, மேரி திருமணம் நடந்தது. ஆனால், குடும்பம் நடத்துவதற்கான காலகட்டம் எல்லாம் தாண்டி விட்டது. எனினும் கூட ஹோமி, மேரியின் முந்தைய திருமண உறவில் பிறந்த அவரது மகன் பாபி ஜோன்ஸை தத்தெடுத்தார். பல ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் வசிக்கத் தொடங்கிய பாபி ஜோன்ஸ் அண்மையில்தான் மறைந்தார். (புகைப்படம்; வாடியா மூவிடோன், ராய் வாடியா)
8. மேரி, ஹோமி இருவரும் வீட்டை விட்டு விலகி, ஜூஹூவில் உள்ள குடில் வீட்டில் தங்கி இருப்பது வழக்கம். கிறிஸ்துமஸ் பிறந்த தினத்துக்கு முந்தைய விருந்து உட்பட ஆண்டு முழுவதும் அங்கு விருந்து நடக்கும்.ஹோமி சாண்டா க்ளவ்ஸ் ஆக உடை அணிந்து, வியத்தகு முறையில் தோன்றுவார். அந்த நாளின் செய்தி தலைப்புகளை குறிப்பிட்டு பேசுவார். எண்ணைய் எரிவாயு பிரச்னை 1970-ம் ஆண்டு உச்சத்தில் இருந்தபோது, ஒரு ஒட்டகத்தில் சவாரி செய்தார். எண்ணைய் இறக்குமதிக்காக வேறு யாரையும் விடவும் மத்தியகிழக்கு மற்றும் சவூதி அரேபியாவை இந்தியா நம்பியிருந்த காலகட்டம் அது. (புகைப்படம்; வாடியா மூவிடோன், ராய் வாடியா)
9. பெண்ணியத்தின் போஸ்டர் பெண்; அதே போல நாடியா சில தீவிரமான பாத்திரங்களை முயற்சி செய்து பார்த்தார். எனினும், ஸ்டண்ட்நாயகியாக, ஹந்தர்வாலியாக ஆளுமையாக ரசித்த ரசிகர்களிடம் அவை விலைபோவது கடினமாக இருந்தது. அவர் இந்தியில் பணியாற்றினார். அதில் முழுமையான தொழில்முறை இருந்தது. இதயத்தில் இருந்து வரிகளைக் கற்றுக் கொண்டார். பெண் உரிமைகள் தொடர்பான தீவிரமான செய்திகளை புரிந்து கொள்வது அவருக்கு எளிதாக இருந்தது. ஒரு ஸ்டண்ட் திரைப்படம் என்ற பரந்த சூழலில் இருந்து விடுதலை பெற்றார். அதற்கு ஒரு உதாரணம் டயமண்ட் குயின்(1940). இது சண்டை காட்சிகள், அமளிகள் கலந்த கலவையாக, ஊழலுக்கு எதிரான போராட்டம், கல்வி மற்றும் கல்வியறிவை ஆதரித்தல் பேரினவாத த்துக்கும், ஆணாதிக்கத்துக்கும் எதிராக இந்திய பெண்களுக்கு அறிவுறுத்தவும் செய்கிறது. (புகைப்படம்; வாடியா மூவிடோன், ராய் வாடியா)
10. கஹிலரி என்ற 1968-ம் ஆண்டு வெளியான திரைப்படம்த்தில் நாடியா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். அப்போது அவரது 50வது வயதின் இறுதியில் இருந்தார். விளம்பரத்தில் வெளியான அவரது படங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டவை போல இருந்தன. ஆனால், அவரது வயது படத்தில் தெளிவாகத் தெரிகிறது. இது ஒரு பொழுதுபோக்குத் திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் பெண் ஜேம்ஸ் பாண்ட் ஆக நடித்தார். இதர நடிகர், நடிகையர் ரொமான்டிக் பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். பிற நடிகர்களுக்கு அவர் வழிகாட்டியாக திகழ்ந்தார். செம்பூரில் உள்ள மூவிடோன் ஸ்டுடியோவில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. (புகைப்படம்; வாடியா மூவிடோன், ராய் வாடியா)
11. கஹிலரியில் நாடியா; எப்போதும்போல் சுறுசுறுப்புடன், அதிக உற்சாகத்துடன் (புகைப்படம்; வாடியா மூவிடோன், ராய் வாடியா)
இக்கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க...
தமிழில்: கே பாலசுப்ரமணி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.