இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ‘தி வொண்டர்மென்ட் டூர்’ இசை நிகழ்ச்சி குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
உலகின் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார் ஏ.ஆர். ரஹ்மான். கடந்த வாரம் லண்டனில் இருந்து திரும்பிய ரஹ்மானுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பின்னர், நீர்சத்துக் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில், சில மணிநேர சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்.
இந்நிலையில், வட அமெரிக்காவில் ‘தி வொண்டர்மென்ட் டூர்’ என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளதாக விடியோ ஒன்று வெளியிட்டு ரஹ்மான் அறிவித்துள்ளார். வருகின்ற கோடைக் காலத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்தவுள்ளதாகவும் அடுத்தடுத்த அப்டேட்கள் தெரிவிக்கப்படும் என்றும் பதிவிட்டுள்ளார்.