scorecardresearch

புதிய சீரியலை களமிறக்கும் விஜய் டிவி : ஹீரோ யாருனு பாருங்க

Thendral Vanthu Ennai Thodum serial latest update in tamil: விஜய் டிவி புதிதாக களமிறக்கியுள்ள ‘தென்றல் வந்து என்னை தொடும்’ சீரியலில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் காமெடி நடிகர் வினோத் பாபு.

Thendral Vanthu Ennai Thodum

Thendral Vanthu Ennai Thodum serial tamil news: சின்னத்திரையில் நிலவி வரும் போட்டியால் சீரியல் ஒளிபரப்பும் தொலைக்காட்சிகள் அவ்வப்போது புதிய சீரியல்களை களமிறக்கி வருகின்றன. அந்த வகையில் சீரியலுக்கு பெயர்போன விஜய் டிவி புதிய சீரியல் ஒன்றை ஒளிபரப்ப உள்ளது. இதற்கான ப்ரோமோ நேற்று வெளியாகியுள்ள நிலையில், இந்த புதிய சீரியலுக்கு ஒரு பாடலின் பெயர் ( “தென்றல் வந்து என்னை தொடும்” ) வைக்கப்பட்டுள்ளது. தவிர சீரியலும் சற்றே வித்தியாசமான கதைக்களத்தை கொண்டதாகவும் தெரிகிறது.

ஏனென்றால், நேற்று வெளியாகி இந்த “தென்றல் வந்து என்னை தொடும்” சீரியலின் ப்ரோமோவில் அமெரிக்காவில் படித்து விட்டு வந்த கதாநாயகிக்கு திடீரென தாலி கட்டி அதிர்ச்சி கொடுக்கிறார் கதாநாயகன். அதன் பிறகு என்ன நடக்க போகிறது என்பது தான் தொடர்ந்து ஒளிபரப்பப்படும் கதையாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்த சீரியலில் கதாநாயகியாக ஈரமான ரோஜாவே மலராக நடித்து பிரபலமான பவித்ரா ஜனனி நடிக்கிறார். இவர் முன்னதாக கல்யாணம் முதல் காதல் வரை, பகல்நிலவு, மெல்ல திறந்தது கதவு, லட்சுமி வந்தாச்சு என பல சீரியல்களில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.

அதன்பிறகு சரவணன் மீனாட்சி தொடரில் துளசி கேரக்டரில் அவர் நடித்திருந்தார். இது சீரியல் ரசிகர்களிடையே அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. பிறகு ராஜா ராணி சீரியலில் நெகடிவ் ரோலில் நடித்திருந்தார். தொடர்ந்து அவர் நடித்த ஈரமான ரோஜாவே சீரியல் அவரை மேலும் பிரபலம் அடைய செய்தது.

கதாநாயகனாக காமெடியன் மற்றும் சீரியல் நடிகர் வினோத் பாபு நடிக்கிறார். வினோத் பாபு ஆதித்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய காமெடி ஷோக்களின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகினார். தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ஷோக்களிலும் நடித்துள்ளார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காமெடி ராஜா கலக்கல் ராணி ஷோ-வில் போட்டியாளராக கலந்துள்ளார். இவர் முன்னதாக சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலில் வேலு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Thendral vanthu ennai thodum serial tamil news comedy actor vinoth babu as a hero in vijay tvs news serial