போற போக்க பார்த்தா தேனும் – ஹீரோ சாரும் சீக்கிரமா சேர்ந்துருவாங்க போல!

தேனும், அருளும் கனவு உலகத்தில் வாழ தொடங்கி இருக்கிறார்கள்

Thenmozhi ba henmozhi ba serial arul
Thenmozhi ba henmozhi ba serial arul

Thenmozhi ba henmozhi ba serial arul : விஜய் டிவியின் தேன்மொழி பி.ஏ, ஊராட்சி மன்றத் தலைவர் என்கிற சீரியலில். தேன்மொழியாக ஜாக்குலின் நடித்துள்ளார். கணவன் அருளை ஹீரோ ஹீரோ சார் என்று கூப்பிடுவது ரசிகர்களுக்கு பிடித்த ஒன்று.

தேன்மொழி ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பதால், அவளை மகன் அருளுக்கு பிடிக்காமல் கல்யாணம் செய்து வைக்கும் தந்தை. அவள் காந்திநகர் காரி என்று வீட்டுக்குள் அனுமதிக்காத அம்மா. அதாவது தேன்மொழியின் மாமியார் என்று கதை நகர்ந்துக்கொண்டு இருந்த வேளையில், லாக்டவுனுக்குப் பிறகு கதை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

தேன்மொழிக்கு அருள் என்றால் கொள்ளை பிரியம். திருமணத்துக்கு முன்பிருந்தே அவன் மேல் ஒருதலை காதல் இருந்தது. திருமணத்துக்கு பிறகு அந்த காதல் இன்னும் அதிகமாகிறது. தேன்மொழியை புரிந்துக் கொண்ட, அருளின் பாட்டி அவளுக்கு பக்க பலமாக இருக்கிறார். அவ்வப்போது அவளுக்கு ஐடியா தந்து அசத்துகிறார். இருப்பினும் மருமகளை பழி வாங்க வேண்டும் என்று துடிக்கும், அருளின் அம்மா, கிடைக்கிற கேப்பில் எல்லாம், கிடா வெட்டுகிறார்.

இந்த நேரத்தில் தான் அருல் தேனும் லவ் ஸ்டார்ட் ஆகியுள்ளது. குறிப்பாக தேனின் அன்பும், நேர்மையும் அருக்கு பிடிக்க தொடங்கியுள்ளது. அதன் காரணமாகவே, தேனு உடன் அதிகம் நெருக்கம் காட்டுகிறான். இது அருளின் அம்மாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. எப்ப பார்த்தாலும் திட்டிக் கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் தான் தேனும், அருளும் கனவு உலகத்தில் வாழ தொடங்கி இருக்கிறார்கள். கூடிய விரைவில் நிஜத்திலும் நடக்க போகிறது போல.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Thenmozhi ba henmozhi ba serial arul thenu thenmozhi ba hotstar vijay tv

Next Story
வைரலாகும் சரண்யா பொன்வண்ணன் மகள் நிச்சயதார்த்த புகைப்படங்கள்!Saranya Ponvannan Daughter Engagement Photos gone Viral Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express