/tamil-ie/media/media_files/uploads/2019/09/Thenmozhi-BA-Serial.jpg)
தேன்மொழி பி.ஏ சீரியல்
Thenmozhi BA Serial: சினிமாவில் வரும் முக்கிய பெண் கதாபாத்திரங்களுக்கு அடிதடி அடாவடி என்றிருக்கும் ஆண் கதாபாத்திரங்களைத் தான் ‘ஹீரோ’வாகப் பிடித்துப் போகிறது. இந்த விதி சீரியலுக்கும் பொருந்தும் போல.
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ’தேன்மொழி பிஏ’ என்ற சீரியலில் தொகுப்பாளினி ஜாக்குலின் தேன்மொழியாக நடிக்கிறார். கல்லூரியில் படித்து, விளையாட்டுத் தனமாக இருக்கும், எந்தவித குறிக்கோளும் இல்லாமல் கல்யாணம் செய்துகொண்டு செட்டிலாகி விட வேண்டும் என்கிற மைண்ட்செட்டில் இருக்கும் கிராமத்துப் பெண் தான் தேன்மொழி. அப்பா பார்க்கும் வரன் எல்லாம் தட்டிப் போகுதே என்கிற கவலை வேறு.
இதற்கிடையே அடிப்பது, அடித்த பின்னர் பணம் தருவது என சினிமா ஹீரோ போல சிலவற்றை செய்யும் ஊர் பிரசிடென்ட் மகன் அருள்வேல் தேன்மொழியின் கனவு ஹீரோவுடன் ஒன்றிப்போகிறான். அவனை ஹீரோ சார் ஹீரோ சார் என்று அழைப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறாள் தேன்மொழி.
தேன்மொழியின் ஊரில் சைக்கிள் போட்டி நடக்கிறது. மொபட் ஓட்ட தெரிந்த தேன்மொழிக்கு சைக்கிள் ஓட்ட தெரியவில்லையாம். இதை நாமும் நம்பித்தான் ஆக வேண்டும். அவளின் நண்பன் அன்பு கொண்டு வந்த சைக்கிளில் கற்றுக் கொள்ள முற்படுகிறாள் தேன்மொழி. அப்போது அருள்வேல் ஜீப்பில் மோதி, அந்த சைக்கிள் சுக்குநூறாக உடைந்து விடுகிறது. ”சைக்கிள் ரேஸில் கலந்துக்கிட்டு, ஸ்கூட்டியை பரிசா வாங்கி கல்யாணம் செய்துக்கலாம்னு பார்த்தேன். சீதனம் இல்லாம எந்த மாப்பிள்ளை இனி என்ன கல்யாணம் செஞ்சுக்குவான்னு” தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறாள் தேன்மொழி.
அடுத்த நாள் புதிய சைக்கிள் தேன்மொழியின் வீடு தேடி வருகிறது. பழைய சைக்கிளை உடைச்சதுக்கு ஆர்யா ஓட்ற மாதிரி புது சைக்கிள வாங்கிக் கொடுத்துருக்காரு ஹீரோ சாருன்னு சிலாகிக்கிறாள் தேன்மொழி. அவள் எப்படி ஊராட்சிமன்ற தலைவியாகிறாள் என்பதை அடுத்தடுத்த எபிசோட்களில் தெரிந்துக் கொள்வோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.