கொரோனா தொற்று பாதிப்பு : சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ் மரணம்

Kutty Ramesh Passed Away : கொரோனா தொற்று பாதிப்புக்கு தேன்மொழி சீரியல் நடிகர் குட்டி ரமேஷ் மரணமடைந்தார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும நிலையில், பலி எண்ணிக்கையும் கனிசமாக உயர்ந்து வருகிறது. இதில் திரைத்துறை பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வரும் நிலையில், ஒரு சிலர் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தேன்மொழி சீரியலில், நாயகி ஜாக்குலினின் அப்பாவாக நடித்து வந்த நடிகர் குட்டி ரமேஷ் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, இன்று அதிகாலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணமடைந்தார். இவர்மறைவுக்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், அவர் இறந்த செய்தி கேட்டு கடும் அதிர்ச்சி ஆன நடிகை ஜாக்குலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பதிவில், “குட்டி ரமேஷ் அப்பா. நீங்கள் உயிருடன் இல்லை என்பது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. நீங்கள் சிறந்த மனிதராகவும் இனிமையான அப்பாவாகும் இருந்தீர்கள். உங்களை அதிகம் மிஸ் செய்வேன். எனக்கும் அப்பாகளுக்கும் ராசி இல்லை. RIP” என பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து குணச்சித்திர நடிகை கம்பம் மீனா செல்லமுத்து, “அய்யோ கடவுளே என்ன கொடுமை இது ரமேஷ் ஸார். எப்பவுமே சுறுசுறுப்பா கலகலனு இருப்பிங்களே … நீங்க சரியாகி வந்துருவிங்கனு முழு நம்பிக்கையோட இருந்தோமே … .மீனாம்மா வாங்க டிக்டாக் பண்ணலாம் ஃபேஸ்புக்ல போடுங்க இன்ஸ்டால போடுங்கனு சொல்லுவிங்களே ரமேஷ் ஸார். எத்தனை லைக் வந்துருக்கு என்னென்ன கமெண்ட் வந்திருக்குனு கேப்பிங்களே ரமேஷ் ஸார்.. உங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் ஸார்” என கூறி உள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பாண்டியன் ஸ்டார்ஸ் சீரியலில் நடித்து வந்த நடிகர் செல்லை சிவா மரணமடைந் நிலையில், தற்போது குட்டி ரமேஷ் மரணமடைந்துள்ளார். அடுத்தடுத்து இரு சின்னத்திரை நடிகர்களின் மறைவு சின்னத்திரை நடிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Thenmozhi serial actor kutty ramesh passed away for covid 19

Next Story
அக்ஷைய் குமாரை நம்பி தனுஷை கைவிட்ட த்ரிஷா… இது பழைய கதைதான்… ஆனால் பவர்புல்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com