Advertisment

பிரித்விராஜ் அப்படி மறைமுகமாக சொன்னது விஜய் சேதுபதியையா?

’லூசிஃபெர்’ படத்தில் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பதாக ஏற்கனவே செய்திகள்  வெளியாகின. ஆனால் இச்செய்தி உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Prithviraj about Vijay sethupathi

மலையாளம் மற்றும் தமிழில் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடிப்பவர் நடிகர் பிரித்விராஜ்.

Advertisment

தற்போது இயக்குநர் அவதாரமும் எடுத்துள்ளார். ஆம்! தற்போது இவர் ’லூசிஃபெர்’ எனும் படத்தை இயக்கி வருகிறார். இதில் மலையாள முன்னணி நடிகர் மோகன்லால் ஹீரோவாக நடிக்கிறார். இவருடன் விவேக் ஓபராய், மஞ்சு வாரியர், இந்திரஜித் சுகுமாரன், டோவினோ தாமஸ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

வரும் மார்ச் 28-ம் தேதி இந்தப் படம் வெளியாகவிருக்கும் நிலையில், நாளை இதன் ட்ரைலர் வெளியீட்டு விழா அபுதாபியில் நடக்கிறது.

தற்போது இதுகுறித்து, “இதுவரை வெளிவந்த விஷயங்கள் தவிர்த்து, ஒரு முக்கியமான சஸ்பென்ஸும் இப்படத்தில் உள்ளது. அது விழாவன்று தெரிய வரும்” எனக் குறிப்பிட்டுள்ளார் பிரித்விராஜ்.

’லூசிஃபெர்’ படத்தில் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பதாக ஏற்கனவே செய்திகள்  வெளியாகின. ஆனால் இச்செய்தி உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், இது குறித்த அறிவிப்பாக இருக்குமோ என்ற யோசனையில் மூழ்கியிருக்கிறார்கள் தமிழ் - மலையாள விஜய்சேதுபதி ரசிகர்கள்!

Vijay Sethupathi Mohanlal Prithvi Raj
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment