தெறி படத்தில் விஐய் சமந்தாவுக்கு பிறந்த குழந்தையின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்ளை ஷாக்காகியுள்ளது.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தெறி. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். ராதிகா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.மேலும் மீனாவின் மகள் நைனிகா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் நைனிகாவிற்கு என ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகியது.
தெறி பேபி வைரல் ஃபோட்டோ
படத்தின் ஃப்லாஷ்பேக்கில் விஜய்க்கும் சமந்தாவுக்கும் ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது. பிற்காலத்தில் ராதிகா மற்றும் சமந்தாவின் மரணத்திற்கு பிறகு பிஞ்சு குழந்தையை ஆபத்தில் இருந்து விலகி வைக்கவே விஜய் ஊரை விட்டு புறப்பட்டு, அடையாளம் மாறி வாழ்கிறார். அந்த குழந்தை தற்போது எப்படி வளர்ந்திருக்கிறாள் எனக் காட்டும் புகைப்படம் ஒன்று இணையத்தளம் முழுவதும் ரவுண்டு அடிக்கிறது.
அந்தப் படத்தில் குட்டி குழந்தையாக இருந்த பொண்ணா இது என ரசிகர்கள் பலரும் ஷாக்காகி வருகின்றனர்.