நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. யதார்த்தமான படங்களைவிட பெரிய படங்கள் மட்டுமே பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெறும் என்ற தொற்றுநோய்க்கு பிந்தைய கருத்தை இந்த படம் உடைத்துள்ளது. ரொமாண்டிக் நகைச்சுவை கலந்த குடும்ப படமான திருச்சிற்றம்பலம் திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து நல்ல விமர்சனங்களைப் பெற்றது. தமிழக பாக்ஸ் ஆபிஸில் இப்படம் சுமார் ரூ.39 கோடி வசூலித்துள்ளதாகவும், அடுத்த சில நாட்களில் ரூ.50 கோடியை தாண்டிவிடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படம் உலகம் முழுவதும் 4 நாட்களில் ரூ 50 கோடி வசூல் செய்தது.
திருச்சிற்றம்பலம் தமிழ்நாடு பாக்ஸ் ஆஃபீஸில்,
1வது நாள் – ரூ. 9.52 கோடி
2வது நாள் – ரூ. 8.79 கோடி
3வது நாள் – ரூ. 10.24 கோடி
4வது நாள் – ரூ. 11.03 கோடி
என மொத்தம் – ரூ. 39.58 கோடி வசூலித்துள்ளது என்று மனோபாலா விஜயபாலன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பாசிட்டிவ் வாய்மொழி விமர்சனங்களால் திருச்சிற்றம்பலம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சீராக அதிகரித்துள்ளது. இந்த படம் காதல் கதையாக இருந்தாலும், குடும்ப பார்வையாளர்களிடம் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த படத்தில் தனுஷ் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் ஒரு உணவு விநியோக நபரைப் பற்றியது. அவர், தனது துயரம் மற்றும் அதிர்ச்சியால் காதலைக் கண்டுபிடிக்க போராடுகிறார்.
திருச்சிற்றம்பலம் படத்தில், நடிகை நித்யா மேனன் மற்றும் இயக்குநர் பாரதிராஜா ஆகியோரின் சிறப்பான நடிப்பிற்காக பாராட்டப்படுகிறது. நித்யா மேனன், பாரதிராஜா பல உணர்ச்சிகரமான தருணங்களுடன் படத்தை ஒரு லேசான நகைச்சுவையாக மாற்றியுள்ளனர். திருச்சிற்றம்பலம் படம் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளிலும் படம் நன்றாக ஓடுகிறது என்று சினிமா துறையினர் கூறுகிறார்கள்.
இயக்குநர் மித்ரன் ஜவஹர் - தனுஷ் கூட்டணி நான்காவது முறையாக இணைந்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு, தனுஷ் மற்றும் அனிருத் மீண்டும் இணைவது இந்த படத்தின் விற்பனைக்கு மற்றொரு காரணம் என்று கூறுகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”