thirumanam serial promo : டிவி சீரியலுக்கு அழிவே இல்லை எனலாம். எத்தனை ஆண்டுகள் மெகா சீரியல்கள் நீண்டாலும் அதை மிகவும் பொறுமையுடன் கண்டுக்களிக்க தயாராக இருக்கிறார்கள். மாமியார் மருமகள், கள்ளக்காதல், வேலைக்கார பெண், விவாகரத்து, போலீஸ் கதை, ஆசிரியர் சீரியல் என எப்படி போட்டாலும் பார்க்க ஆட்கள் ரெடி.
பெரியவர்கள், இல்லத்தரசிகள் தரசிகள் தான் சீரியர்ல் பார்ப்பார்கள் என்றெல்லாம் விமர்சிக்கப்பட்ட காலம் போய் இப்போது இளசுகளும் சீரியலில் ஆர்வம் காட்டத் தொடங்கி விட்டனர். அவர்களை கவரும் வகையில் இளைஞர்களை மையப்படுத்தியும் காதல், திருமணம், கல்லூரி கதை என பல சீரியல்கள் பிரபல தொலைக்காட்சியில் உலா வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் சமீபத்தில் இளைஞர்கள்,காதலர்கள், பெண்களை அதிகம் கவர்ந்த சீரியல்களில் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் திருமணம் சீரியலும் ஒன்று.
இந்த நாடகம் சில ஆண்டுகளுக்கு முன்பு தான் ஒளிப்பரப்பாக தொடங்கினாலும் அதிகளவில் ரசிகர்களை பெற்ற முதல் சீரியலாக களத்தில் உள்ளது. இதில் வரும் சந்தோஷ் ஜனனி கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த சீரியலின் இன்றைய ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது.
thirumanam promo : சந்தோஷ் பிறந்த நாளுக்கு மிகப் பெரிய சர்பிரைஸ் தர வேண்டும் என்பது தான் ஜனனியின் நீண்ட நாள் ஆசை. அது இன்று நிஜமாகியுள்ளது. சந்தோஷ் மீது ஜனனிக்கு இருக்கும் காதல் அனைவரலாலும் அதிகம் உணரப்பட்டு வருகிறது. இருந்த போது சந்தோஷின் காதலி சக்திக்காக ஜனனி தனது வாழ்க்கையை விட்டுக் கொடுக்க முன்வந்து விட்டார்.
நாட்கள் செல்ல செல்ல சந்தோஷூக்கும் ஜனனி மீது ஈர்ப்பு வர தொடங்கி விட்டது. இந்த நேரத்தில் ஜனனி கொடுத்திருக்கும் இந்த சர்பிரஸை சந்தோஷ்க்கு மிகப் பெரிய சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நேரத்தில் தான் இன்ப அதிர்ச்சி தர வருகிறார் சக்தி. சந்தோஷ் ஜனனி இருவரும் அதிர்ச்சியில் உறைந்து போகிறார்கள்.
NINI promo:
விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் பலராலும் அதிகப்படியாக ரசிக்க வைக்கும் சீரியலில் நாம் இருவர் நமக்கு இருவரும் ஒன்று. இதில் மிர்ச்சி செந்தில் 2 கதாபாத்திரங்களில் கலக்கியுள்ளார். குறிப்பாக மாயன் கதாபாத்திரம் நகைச்சுவையுடன் கலந்திருக்கும். இன்றைய நாளுக்கான இந்த சீரியலின் ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. தாமரை வீட்டு வந்தது அனைவருக்கும் பிடிக்கவில்லை. இதன எதிரொலியாக வீட்டில் நடக்கும் அக்கப்போர்களால் மாயன் பொங்கி எழுகிறார்.