Thirumanam Public Review : நீண்ட நாட்களுக்கு பிறகு இயக்குநர் சேரன் இயக்கி நடித்திருக்கும் படம் திருமணம் சில திருத்தங்களுடன் இன்று எல்லா தியேட்டர்களிலும் வெளியானது.
2015ம் ஆண்டு வெளியான படம் ஜே.கே என்னும் நண்பனின் வாழ்க்கை என்ற படத்தை இயக்கியவர் சேரன். இவரின் இந்த படம் பெரிதாக வெற்றியடையவில்லை என்றாலும், இதற்கு முன்னதாக இவர் நடித்த பிரிவோம் சந்திப்போம் போன்ற குடும்பக் கதை படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
Thirumanam Public Review : திருமணம் விமர்சனம்
சமீபக் காலங்களில் குடும்பக்கதைகளுக்கு மவுசு அதிகமாகிக் கொண்டே உள்ளது. இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் வெளியான படம் தான் திருமணம். இப்படத்தில் உமாபதி ராமய்யா, சேரன், காவ்யா சுரேஷ், சுகன்யா, தம்பி ராமய்யா, எம்.எஸ். பாஸ்கர் மற்றும் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.
ஜமீன் குடும்பத்தை சேர்ந்த உமாபதி ராமையாவின் அக்கா சுகன்யா, தனது ஒரே தம்பி உமாதிபதியின் திருமணத்தை ஊரே அசந்து போகும் அளவுக்கு தடபுடலாக நடத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறார். திட்டம் போட்டு குடும்பம் நடத்தும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த, அரசு ஊழியரான சேரன், தனது தங்கை காவ்யா சுரேஷின் திருமணத்தை எளிமையாக நடத்தி, திருமண செலவை குறைக்க வேண்டும் என்று நினைக்கிறார்.
இவர்களது இந்த முரண்பாட்டால், திருமணமே நின்று போய்விடுகிறது. இதனால் இளம் ஜோடிகள் மனம் உடைந்துபோக, அவர்களால் பெரியவர்களும் வருத்தப்பட, இறுதியில் இந்த பிரச்சினை எப்படி தீர்வு கண்டு திருமணத்தை நடத்துகிறார்கள், அது என்ன தீர்வு, என்பது தான் ‘திருமணம்’ படத்தின் மீதிக்கதை.
இந்த படத்திற்கு பாராட்டுகளும் விமர்சனங்களும் வருகின்றது.ஒரு சிலர் இந்த படத்தை பார்த்து கல்யாணம் செய்து வைப்பது அவ்வளவு எளிதல்ல என்று கூறினாலும், பலரும் நல்ல கதையை போர் அடிக்கும் வகையில் எடுத்திருக்கிறார் சேரன் என்று கூறி வருகின்றனர்.