ரீல் கல்யாணம்… ரியல் கல்யாணம்… 2 படத்தையும் வெளியிட்ட சீரியல் பிரபலம்!

Tamil Serial Update : திருமணம் சீரியலில் தன்னுடன் ஜோடியாக நடித்த ஸ்ரோயாவை திருமணம் செய்துகொண்ட நடிகர் சித்து ரீல் மற்றும் ரியல் திருமண புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Thirumanam Serial Siddhu Released Reel And Real Wedding Photo : சமீப காலமாக சீரியலில் ஒன்றாக இணைந்து நடித்து வரும் ஜோடி நிஜவாழ்விலும் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்திய புது வரவு ஜோடி சித்து – ஸ்ரேயா. ஆனால் ஒன்றாக இணைந்து நடிக்கும்போது இவர் தான் தனக்கு மனைவியாக வரப்போகிறார் என்று தெரியாது என சித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் சீரியலில் நடித்து புகழ்பெற்றவர் சித்து. இந்த சீரியலில் நடிக்கும்போதே தன்னுடன் இணைந்து நடித்த ஸ்ரேயாவுடன் காதல் ஏற்படவே இருவரும் சீரியல் மூலம் தங்களது காதலை வளர்த்துக்கொண்டனர். மேலும் இவர்கள் இருவருக்கும் இடையேயான ரொமான்ஸ வீடியோக்களும் இணையத்தில் வைரலாக பரவியது. கடந்த 2018-ம் ஆண்டு தொடக்கப்பட்டு நன்றாக போய்க்கொண்டிருந்த இந்த சீரியல், கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சித்து விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியலில், கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில், சித்து – ஷ்ரேயா இருவருக்கும் கடந்த வாரம் திருமணம் நடைப்பெற்றது. இந்த திருமணத்திற்கு சின்னத்திரை பிரபலங்கள் பரலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில், இது தொடர்பாக புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது. இந்நிலையில் தற்போது சித்து தனது திருமணம் குறித்துஇன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

திருமணம் சீரியலில் நடத்த திருமண புகைப்படத்தையும், நிஜத்தில் கடந்த வாரம் நடைபெற்ற திருமண புகைப்படத்தையும் ஒன்றாக இணைத்து ரீல் ரியல் திருமணம் என்று பதிவிட்டுள்ளார். மேலும் “திருமணம் சீரியல் பன்ணும் போது எனக்குக் கொஞ்சம் கூட தெரியாது இந்த பொண்ணு தான் என் பொண்டாட்டியா வரப்போகுதுன்னு. எங்க ஆடியன்ஸ் சொல்வாங்க, நீங்க ரெண்டு பேரும் ஒரு மேஜிக்ன்னு, அது உண்மை தான் போல. பியூட்டிஃபுல் ஃபீலிங்… நான் கேக்காமலே கெடச்ச வரம் தான் ஷ்ரேயா. லவ் யூ பொண்டாட்டி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Thirumanam serial actor siddu weds shreya reel and real photos

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com