Thirumanam Serial : ஜனனியின் தங்கை அனிதாவும், சந்தோஷின் தம்பி நவீனும் காதலிக்கிறார்கள். இந்த விஷயம் ஜனனி சந்தோஷ் இருவருக்குமே தெரியும். ஆனால் அனிதாவுக்கு அவளது அத்தை மகனுடன் திருமண ஏற்பாடுகள் படு வேகமாக நடக்கிறது. மறுபுறம் நவீனுக்கு, மூத்த அண்ணி மாயாவின் தங்கை ஆர்த்தியுடன் நிச்சயம் வரை செல்கிறது.
Advertisment
விவாகரத்து விஷயத்தைப் பற்றி ஜனனியிடம் விசாரிக்கிறார் அவளது அண்ணன். அதற்கு முன்பு இருந்த பிரச்னைகளைப் பற்றியும், விவாகரத்துக்கு தான் ஒத்துழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதையும் அவரிடம் விளக்குகிறாள் ஜனனி. பின்னர் முன்னறிவிப்பில்லாமல் ஜனனியின் வீட்டுக்கு வருகிறான் சந்தோஷ். அப்போது விவாகரத்து விஷயம் தன் அண்ணனுக்கு தெரிந்து விட்டதை அவனிடம் கூறுகிறாள் ஜனனி. அப்போது சந்தோஷிடம் அனிதா ஒரு உதவி கேட்கிறாள். நவீன் இந்தத் திருமணத்தில் சந்தோஷமாகக் கலந்துக் கொண்டால் தான், என்னால் இந்த வாழ்க்கையை ஏற்றுக் கொள்ள முடியும். இல்லையெனில் குற்ற உணர்ச்சி என்னைக் கொன்றுவிடும் என்கிறாள்.
திருமணத்துக்கு 2 நாட்களே உள்ள நிலையில், நவீனை நினைத்து அழுதுக் கொண்டிருக்கிறாள் அனிதா. ’உங்க அப்பாவையும், அண்ணனையும் நினைச்சுப் பாரு அனிதா. நீ இன்னும் நவீனையே நினச்சிட்டு இருக்க, காதலுக்காக தற்கொலை பண்ணிக்கிறது. வீட்டை விட்டு ஓடிப் போறது எல்லாம் சினிமாவுல தான் சாத்தியம். உண்மைல அப்படி எல்லாம் செய்ய முடியாது” என அட்வைஸ் செய்கிறார் அவளது அண்ணி.
Advertisment
Advertisements
அனிதாவுக்கு ஆனந்துடன் திருமணம் நடக்குமா, இல்லையா என்பதை வரும் நாட்களில் தெரிந்துக் கொள்ளலாம்.