திருமணம் சீரியல்: நவீனால் அம்மாவை இழந்த அனிதா

அதிக மன அழுத்தத்தின் காரணமாக சிகிச்சை பலனளிக்காமல் அனிதாவின் அம்மா இறந்து விடுகிறார்.

அதிக மன அழுத்தத்தின் காரணமாக சிகிச்சை பலனளிக்காமல் அனிதாவின் அம்மா இறந்து விடுகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Thirumanam Serial, anitha naveen

Thirumanam Serial

Thirumanam Serial : கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் திருமணம் சீரியல் தற்போது மிகுந்த ரணகளத்துடன் சென்றுக் கொண்டிருக்கிறது.

Advertisment

அனிதாவுக்கும் ஆனந்துக்கு திருமணம் நடக்கும் நாளன்று, நவீனை ஒரு கும்பல் கடத்திச் சென்று விடுகிறது. நவீனை அடித்து, அந்தப் படத்தை அனிதாவின் ஃபோனுக்கும் அனுப்பி வைக்கிறார்கள். இதனைப் பார்த்த அனிதா, நவீனுக்கு என்னாச்சோ, ஏதாச்சோவென்று பதறி ஓடுகிறாள். இதற்கிடையே முகூர்த்த நேரம் நெருங்கி, அவள் மண்டபத்தில் இல்லாதது தெரிய வருகிறது.

பிரபலங்கள், ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்த ரஜினிகாந்த்!

Advertisment
Advertisements

விஷயத்தை தெரிந்துக் கொண்ட, ஆனந்தின் அம்மா, அனிதாவின் அப்பாவிடம் சண்டையிடுகிறார். குடும்பமே அதிர்ச்சியாகிறது. இதனால் அனிதாவின் அம்மா, அப்பா இருவருக்குமே உடல்நிலை சரியில்லாமல் போகிறது. அவர்களை ஐ.சி.யூ-வில் சேர்க்கிறார்கள் குடும்பத்தினர். அதிக மன அழுத்தத்தின் காரணமாக சிகிச்சை பலனளிக்காமல் அனிதாவின் அம்மா இறந்து விடுகிறார். வீட்டில் அனைவரும் மூளைக்கு மூளை உட்கார்ந்து அழுதுக் கொண்டிருக்கிறார்கள்.

அனிதாவும், நவீனும் தனித்தனியாகத் தான் காணாமல் போயிருக்கிறார்கள் என்பதை அனிதாவின் அண்ணன் நம்ப மறுக்கிறார். பின்னர் வீட்டிற்கு திரும்பும் அனிதா, அம்மா இறந்ததை அறிந்து ஃபோட்டோ முன் நின்றுக் கொண்டு அழுகிறாள். ‘பண்றத எல்லாம் பண்ணிட்டு, இங்க வந்து நீலிக்கண்ணீர் வடிக்கிறியா’ என அனிதா கழுத்தைப் பிடித்து, வெளியில் இழுத்து வந்து தள்ளுகிறார் அவளது அண்ணன்.

‘எனக்கு எல்லாம் தெரியும். எல்லாத்துக்கும் காரணம் உங்க தம்பி தான மாப்பிள்ள’ என சந்தோஷிடம் கூற அவர்கள் அதிர்ச்சியாகிறார்கள். கோபமாகும் சந்தோஷின் அப்பா, இனி நவீன் ஒரு நிமிடம் கூட இங்கு இருக்கக் கூடாது என்கிறார். அனிதாவை அவளது அண்ணன் வீட்டை விட்டு துரத்துகிறார். இவர்கள் இருவரையும் கெளதம் அழைத்துக் கொண்டு போகிறான்.

ஆனந்துடனான அனிதாவின் திருமணம் நின்றுவிட்டது. இனி நவீனை திருமணம் செய்துக் கொள்ள குடும்பத்தினர் சம்மதிப்பார்களா...

Tv Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: