Thirumanam Serial : கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் ’திருமணம்’ சீரியல் ரசிகர்களுக்கு, அனிதாவுக்கு ஆனந்துடன் திருமணம் நடக்குமா? இல்லையா என்பது தான் பெரும் கேள்வியாக உள்ளது.
Advertisment
ஜனனியின் தங்கை அனிதாவும், சந்தோஷின் தம்பி நவீனும் காதலிக்கிறார்கள். இதற்கிடையே அக்கா மகன் ஆனந்துக்கு அனிதாவை கல்யாணம் செய்து தருவதாக, அவளது அப்பா வாக்குக் கொடுத்து விடுகிறார். அப்பா அத்தையிடம் வாக்குக் கொடுத்து விட்டார், அதனால் அப்பா சொன்னதைக் கேட்கும் படி அனிதாவிடம் கூறி அத்தை மகனை திருமணம் செய்துக் கொள்ள சொல்கிறாள் ஜனனி.
நவீன் சந்தோஷமாக வந்து தனது திருமணத்தில் கலந்துக் கொண்டால் தான், என்னால் இந்த வாழ்க்கையை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியும் என்கிறார் அனிதா. சந்தோஷும், ஜனனியும் அதற்கு சம்மதிக்கிறார்கள். அப்போது நவீன் காணாமல் போகிறான். முகூர்த்தத்திற்கு அவன் வந்து விடுவான் என்ற நம்பிக்கையில் தனக்குள் இருக்கும் சோகத்தை மறைத்து, ரிசப்ஷனில் புன்னகைக்கிறாள் அனிதா. (இந்த எபிசோடில் அனிதா கதாபாத்திரத்திற்கு வேறொருவர் மாற்றப்பட்டிருக்கிறார், பழைய அனிதா - நவீனுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏக வரவேற்பு இருந்தது குறிப்பிடத் தக்கது)
Advertisment
Advertisements
ஆனால் மறுபுறமோ நவீன் காணாமல் போக, அவனை சந்தோஷும், கெளதமும் தேடுகிறார்கள். விடிந்தால் முகூர்த்தம், அப்போது அனிதா ஃபோனுக்கு ஒரு ஃபோட்டோ வருகிறது. அதில் நவீனை கட்டி வைத்து ஒரு கும்பல் அடிக்கிறது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அனிதா, அந்த நம்பருக்கு ஃபோன் செய்து கேட்க, அவர்கள் ஏதோ சொல்கிறார்கள்.
முகூர்த்தத்திற்கு சில மணி நேரமே உள்ள நிலையில், மண்டபம் முழுவதும் தேடியும், அனிதாவை காணோம் என ஜனனியிடம் புலம்புகிறார் அவளது அண்ணி வாணி. அப்போது நவீனும் காணாமல் போன விஷயம் வாணிக்கு தெரிய வருகிறது. ’ஒருவேளை இவங்க ரெண்டு பேரும்’ என அவர் இழுக்க, அவங்க அப்படி செய்றவங்க இல்ல, அப்படி செய்றதா இருந்தா எப்போவோ செஞ்சிருப்பாங்க என்கிறான் சந்தோஷ்.
நவீனை கடத்தியது யார்? அவர்கள் அனிதாவிடம் என்ன கேட்டார்கள்? இந்தத் திருமணம் நடக்குமா? என மண்டையைப் பிய்த்துக் கொள்கிறார்கள் ரசிகர்கள்.