/tamil-ie/media/media_files/uploads/2019/11/Thirumanam-Serial.jpg)
Thirumanam Serial
Thirumanam Serial: கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘திருமணம்’ சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
சக்தியை காதலித்து, ஜனனியை திருமணம் செய்துக் கொள்ளும் சந்தோஷ், தான் சக்தியை காதலிப்பதாகவும், அதனால் உங்களை மனைவியாக ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கூறுகிறார். சரி உங்கள் விருப்பப்படி இருந்துக்கோங்க, வேண்டுமென்றால் விவாகரத்து செய்து விடலாம் என்கிறார் ஜனனி.
யாருக்கும் தெரியாமல் ஜனனி சந்தோஷ் இருவரும் விவாகரத்துக்கு அப்ளை செய்கிறார்கள். இதற்கிடையே ஜனனியை, சந்தோஷிற்கு பிடித்துப் போகிறது. அப்போது சக்தி சிங்கப்பூரில் இருந்து போன் செய்கிறார். செய்வதறியாது முழிக்கும் சந்தோஷ், சக்தியை திருமணம் செய்துக் கொள்ளலாம் என முடிவெடுக்கிறார்.
சந்தோஷ் மீதான காதலால், குறுக்கு வழிகளை கையாள ஆரம்பிக்கும் சக்திக்கு, மன நிலை சரியில்லாமல் போகிறது. சக்தி செய்த சில வேலைகளால் எரிச்சலடைந்த சந்தோஷ், ”நம்ம வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கலாம் ஜனனி” என்று சந்தோஷ் சொல்ல, ஜனனிக்கு பயங்கர கோபம் வருகிறது. ”நான் எத்தனையோ சந்தர்ப்பங்கள் உங்களுக்கு கொடுத்து நீங்க இதை சொல்ல மாட்டீங்களான்னு எதிர்பார்த்தேன். அப்போ நீங்கள் சொல்லலை. இப்போ சக்தி நல்லா இருந்து நீங்க இப்படி சொல்லி இருந்தா, நான் சந்தோஷப்பட்டு இருப்பேன். அவளுக்கு மனநிலை சரி இல்லாத இந்த நேரத்துல இப்படி நீங்க சொல்றது உங்க மேல எனக்கு இருந்த மதிப்பை சுத்தமா குறைச்சுடுச்சுன்னு” ஜனனி சொல்லி விடுகிறார்.
எப்போது ஜனனியும், சந்தோஷும் பரஸ்பரமாக இணைவார்கள் என்பதை தெரிந்துக் கொள்ள மிகுந்த ஆவலுடன் இருக்கிறார்கள் ரசிகர்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.