/tamil-ie/media/media_files/uploads/2019/11/Thirumanam-serial.jpg)
Thirumanam serial
Colors Tamil Thirumanam Serial : கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் அதிக பார்வையாளர்களைக் கொண்டது, திருமணம் சீரியல். ஜனனிக்கும் சந்தோஷுக்கும் இடையே பெரும் பிரச்னையாக இருந்து வந்த சக்தி, ஒருவழியாக அவர்களது வாழ்க்கையில் இருந்து விலகி விட்டார். மனப்பூர்வமாக தங்களது இல்லற வாழ்க்கையைத் தொடங்கியிருக்கும் அவர்களுக்கு, அடுத்த இடையூறாக முன்னர் விண்ணப்பித்திருந்த விவாகரத்து வழக்கு வந்து நிற்கிறது. கோர்ட்டில் இருந்த வந்த காப்பியை, ஜனனி தனது தங்கை தான் என்றுக் கூறி மாயா வாங்கி விடுகிறார். அப்போது தான் அவருக்கு முன்பு ஜனனி - சந்தோஷ் இருவருமே விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தது தெரிய வருகிறது.
தற்போது கிடைத்த கோர்ட் காப்பியை வைத்து, தனது அடுத்த வில்ல(லி)த் தனத்தை தொடங்குவார் என்றே தெரிகிறது. மாயாவின் தங்கை ஆர்த்திக்கும், நவீனுக்கும் வீட்டில் நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது. ஆனால் நவீனின் மனதிலோ சின்ன அண்ணி ஜனனியின் தங்கை அனிதா இருக்கிறாள். ஜனனி சந்தோஷ் இருவருக்குமே இந்த விஷயம் தெரியும். ஆனால் மாயாவோ தனது தங்கையை நவீனுக்கு திருமணம் செய்து வைத்து விட்டால், வில்லத்தனம் செய்வதற்கு இன்னும் ஏதுவாக இருக்கும் என நினைக்கிறாள்.
வேண்டா வெறுப்பாய் மாலையை மாற்றியவன், ஆர்த்தியின் கையில் மோதிரத்தை போடாமல் விலகுகிறான். நவீனின் அப்பாவும், மூத்த அண்ணன் (மாயாவின் கணவர்) ஹரீஷும், என்ன ஏதுவென்று அவனை துளைத்தெடுக்கிறார்கள். ’உங்க விருப்பத்துக்காக என்ன கட்டாயப்படுத்தாதீங்க’ என பொத்தாம் பொதுவாய் சொல்கிறான் நவீன். ஹரீஷ் நவீனை அடிக்க கையை நீட்ட, சந்தோஷுக்கு கோபம் வருகிறது. ‘தோளுக்கு மேல வளந்த பையன அடிக்கலாமா அண்ணே’ என்கிறான் சற்று கோபத்தோடு.
இது அவன் வாழ்க்கை, அவனே முடிவெடுக்கட்டும். இதுல யாரும் தலையிடாதீங்க என தம்பிக்கு ஆதரவாக நிற்கிறான் சந்தோஷ். அனிதா விவகாரம் தெரியவருமா, அல்லது ஆர்த்தியையே நவீன் திருமணம் செய்துக் கொள்வானா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.