thirumanam serial today : கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் திருமணம் சீரியல் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கட்டி போட்டு வைத்துள்ளது எனலாம். சமூகவலைத்தளங்களில் எந்த பக்கம் திரும்பினாலும் சந்தோஷ் - ஜனனி ஃபேன்ஸ் கிளப் தான்.
Advertisment
thirumanam serial colors tamil:
திருமணம் சில ஆண்டுகளுக்கு முன்பு தான் ஒளிப்பரப்பாக தொடங்கினாலும் அதிகளவில் ரசிகர்களை பெற்ற முதல் சீரியலாக களத்தில் உள்ளது. இதில் வரும் சந்தோஷ் ஜனனி கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த சீரியலின் இன்றைய ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது.
Advertisment
Advertisements
சந்தோஷை காப்பாற்ற நினைத்து தனது உயிரை பணயம் வைத்த ஜனனி இப்போது குணமடைந்து மீண்டும் சந்தோஷ் வீட்டிற்கு வந்து விட்டார். ஜனனி மீது சந்தோஷ்க்கு ஏற்கனவே காதல் வந்துவிட்ட நிலையில் சக்தியை நினைத்து முடிவு எடுக்க முடியாமல் தவித்து வருகிறார். ஜனனிக்காக சந்தோஷ் துடிப்பதை பார்த்த சக்தி அழுதுக் கொண்டே சென்று விட்டார். ஜனனியின் அப்பா மற்றும் அண்ணாவுக்காக சந்தோஷ் தனது முடிவை வெளியில் சொல்லாமல் மறைத்து வருகிறார். இதெற்கெல்லாம் முடிவு சந்தோஷ் கையில் மட்டுமே உள்ளது.
azahgu serial : பூர்ணா கற்பமாக இருப்பதாக கூறும் பொய்யை கேட்டு, கர்ணா தனது அம்மா, அண்ணி,அப்பா என ஒட்டு மொத்த குடும்பத்தையும் வெறுத்துக் கொண்டு பூர்ணாவிடம் பாசத்தை பொழிக்கிறான். குழந்தை பற்றி பேசுவது, பூர்ணாவை ஒருவேலை செய்ய விடாமல் பார்த்துக் கொள்வது என பூர்ணாவிடம் பாசத்தை பொழிக்கிறான்.
இதையெல்லாம் பார்த்து குற்ற உணர்ச்சியில் பொங்குகிறாள் பூர்ணா. தான் சொல்லியது பொய் என தெரிந்தால் கர்ணா அதை தாங்குவனா என்பது தான் பூர்ணாவின் யோசனை. இந்த நேரத்தில் தான் பூர்ணாவின் அப்பா, அவளை சந்தித்து நீ செய்வது தப்பு என எடுத்து கூறுகிறார். இதனால் மனமுடையும் பூர்ணா கர்ணாவிடம் உண்மையை சொல்ல வேண்டும் என முயற்சிக்கிறார்.