செம்பருத்தி தொடரில் இணைந்த பிரபல சீரியல் நடிகை யார் தெரியுமா?

திருமதி ஹிட்லர் சீரியலில் மூன்று மருமகள்களில் ஒருவராக நடித்து அலப்பறை செய்த, பவ்யாஸ்ரீ இப்போது செம்பருத்தி சீரியலில் எண்ட்ரி கொடுக்கிறார்.

sembaruthi serial
Thirumathi hitler serial fame bhavya sree now join hands with sembaruthi serial

ஜீ தமிழ் டிவி தனது பார்வையாளர்களை மகிழ்விக்க பல புதிய முயற்சிகளை எடுத்து வருகிறது. ஏற்கெனவே ஒளிபரப்பான சத்யா, ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி போன்ற சீரியல்களை முடித்து, தற்போது புதிய கதை, புதிய கோணத்துடன் இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகிறது.  அத்துடன் சமீபத்தில் மட்டும் ஏராளமான புது சீரியல்கள், ஜீ தமிழ் டிவியில், ஒளிபரப்பாகி வருகின்றன.

இந்த மாதத்தில் மட்டும் பேரன்பு, தெய்வம் தந்த பூவே, வித்யா No.1, ரஜினி சீரியல்கள் ரீலிஸ் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் ஒரு பெரிய இடைவேளைக்கு பிறகு, ஜீ தமிழ் டிவியின் பிராண்ட் ஷோவான’ ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியும் இம்மாதம் தொடங்கப்பட்டது. நடிகை ஸ்னேகா, பிக்பாஸ் சம்யுக்தா மற்றும் பிரபல சீரியல் ஆர்டிஸ்ட் மிர்ச்சி செந்தில் ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கு நடுவர்களாக உள்ளனர்.

மேலும் பல சீரியல் ஃபார்மட்களை போலவே, ஜீ தமிழ் டிவியிலும் அடிக்கடி சீரியல்களின் சங்கமங்கள் அரங்கேறி வருகிறது.

அந்தவகையில் ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் செம்பருத்தி சீரியல், தமிழக மக்களின் விருப்பமான தொடராக உள்ளது. இதில் பார்வதியாக வரும் நடிகை ஷபானாவுக்கு ஏராளமான ரசிகர்களும் உள்ளனர். மேலும் இந்த சீரியலில், பார்வதியின் கணவன், ஆதியின் அம்மாவாக வரும் ஆதிகடவூர் அகிலாண்டேஸ்வரி @ ப்ரியா ராமனுக்கு செம்பருத்தி சீரியல் ஒரு பெரிய கம்-பேக்.

தற்போது செம்பருத்தி சீரியல் நாளுக்கு-நாள் பல்வேறு திருப்பங்களுடன் அரங்கேறி வருகிறது. பார்வதியின் சிக்கலைத் தீர்க்க, ஜீ தமிழ் டிவியின் அனைத்து சீரியல் ஹீரோயின்களும், தேவயானி உட்பட நவகிரக நாயகியாக வந்த காட்சிகள் அனைத்தும் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தது.

மேலும் சீரியலில் நிறைய புது கேரக்டேர்கள் எண்ட்ரி கொடுத்து வருகின்றனர். அப்படி சமீபத்தில் பார்வதியின் அப்பாவாக, பிரபல சினிமா நடிகர், ஜி.எம். குமார் அறிமுகமானார்.

இப்போது திருமதி ஹிட்லர் சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பவ்யாஸ்ரீ-யும் செம்பருத்தி சீரியலில் எண்ட்ரி கொடுக்கிறார்.

அமித் பார்கவ் மற்றும் கீர்த்தனா முன்னணி வேடங்களில் நடிக்கும் திருமதி ஹிட்லர் சீரியலில், பவ்யாஸ்ரீ மூன்று மருமகள்களில் ஒருத்தியாக சித்ரா எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தனது மாமியாரும், ஹிட்லரும் மனைவியையும் சிக்கலில் மாட்டிவிட இவரும், சக மருமகள்களும் எடுக்கும் அத்தனை நடவடிக்கைகளும் அலப்பறையாக இருக்கும்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பவ்யா, அதில் அடிக்கடி தனது புகைப்படங்கள், ரீல்ஸ்களை பதிவிட்டு ரசிகர்களுடன் எப்போதும் கனெக்டிவ்-வாக இருப்பார்.

தற்போது பவ்யா, செம்பருத்தி சீரியல் நடிப்பது குறித்த, ஒரு ஷூட்டிங் ஸ்பாட் போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் பவ்யாஸ்ரீக்கு தங்கள் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Thirumathi hitler serial fame bhavya sree now join hands with sembaruthi serial

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express