/tamil-ie/media/media_files/uploads/2019/01/a335.jpg)
thirupur subramaniam phone conversation Rajini
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படம் கடந்த 10ம் தேதி ரிலீசானது. வின்டேஜ் ரஜினியை பல வருடங்கள் கழித்து மீண்டும் கண் முன் நிறுத்திய இயக்குனர் கார்த்திக் சுப்பராஜுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
படத்தில் அதகளம் செய்திருக்கும் ரஜினி, ரசிகர்களை நிறைவாக திருப்திப்படுத்தியிருக்கிறார். தமிழ்நாடு, வெளிநாடு என பேட்ட திரைப்படம் வசூலை அள்ளிக் குவித்து வருகிறது.
இந்த நிலையில், பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் ரஜினியிடம் தொலைபேசியில் படத்தில் ரிசல்ட் குறித்து விளக்கம் அளித்திருக்கிறார். அதில், "படம் மிகப்பெரிய ஹிட் ஆகியுள்ளது என்றும், மக்கள் பெருமளவில் பேட்ட படத்தை ரசிக்கிறார்கள் என்றும் பொங்கலுக்கு ஒரு நல்ல படம் கொடுத்து இருக்கீங்க, வாழ்த்துகள்" என்றும் கூறுகிறார்.
அதற்கு தனது காந்தக் குரலில் பதிலளிக்கும் ரஜினி, "நீங்க சொன்னா, மொத்த சினிமா இண்டஸ்ட்ரியே சொன்ன மாதிரி. மிக்க நன்றி சார்" என்று தெரிவிக்கிறார்.
#Thalaivar responds to a voice message from #TirupurSubramaniam who is supper happy with #Petta and the way people are celebrating it!!!????
Hearing Superstar's voice raises your energy level to 300%!!!????
This clip made my day! Thanks to @RIAZtheboss ????pic.twitter.com/MYAmx8cuuj
— Rajini Fans 2.0 (@RajiniFC) 12 January 2019
இந்த ஆடியோ தற்போது சமூக தளங்களில் ரஜினி ரசிகர்களால் பெருமளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.