மலையாள சினிமாவில் உச்சம் தொட்ட நடிகர் மம்முட்டி. இவர் பல வெற்றிப்படங்களை கொடுத்து தற்போதுவரை முன்னணி நடிகராக இருந்து வரும் நிலையில், இவரது மகன் துல்கர் சல்மான், இளைஞர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வரும் நாயகனாக தமிழ் தெலுங்கு, என தென்னிந்திய மொழிகளில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். திரையுலகில் அப்பா மகன் உறவு முறையாக இவர்கள் இருவருக்கும் ஜோடியாக ஒரு நடிகை நடித்துள்ளார். அவர் யார் தெரியுமா?
அந்த நடிகை தான் அதிதி ராவ் ஹைத்ரி. சமீபத்தில் நடிகர் சித்தார்த்தை திருமணம் செய்துகொண்ட இவர், 2006-ம் ஆண்டு வெளியான பிரஜாபதி என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். மலையாளத்தில் வெளியான இந்த படத்தில் ஹீரோவாக நடித்தவர் மம்முட்டி. அதனைத் தொடர்ந்து, சிருங்காரம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், அடுத்து இந்தி படங்களில் நடிக்க தொடங்கினார். நீண்ட இடைவெளிக்கு, பிறகு, மணிரத்னம் இயக்கத்தில் 2017-ம் ஆண்டு வெளியான காற்று வெளியிடை படத்தில் கார்த்தியுடன் நடித்திருந்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/03/03/6gbhoeojte3ofvxuqc3e-111273.webp)
அரசியல்வாதிகள் முகமது சலே அக்பர் ஹைதாரி மற்றும் ஜே. ராமேஷ்வர் ராவின் பேத்தி அதிதி ராவ் ஹைதாரி. அதிதியின் வாழ்க்கையை ஆராய்ந்தால், உங்களுக்கு சுவாரஸ்யமான ஒன்று கிடைக்கும். மம்முட்டி மற்றும் அவரது மகன் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக அதிதி நடித்துள்ளார். மம்முட்டியின் 'பிரஜாபதி' படத்தில் நடித்திருந்த அதிதி துல்கருக்கு ஜோடியாக 'ஹே சினாமிகா' படத்திலும் அதிதி அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/03/03/aditi-rao-hydari-614095.webp)
ஒரு பரதநாட்டிய நடனக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அதிதி, 2007 ஆம் ஆண்டு வெளியான 'ஸ்ருங்காரம்' என்ற தமிழ் படத்தில் தேவதாசி வேடத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார். 2011 ஆம் ஆண்டு சுதிர் மிஸ்ரா இயக்கிய 'யே சாலி ஜிந்தகி' என்ற இந்தி திரைப்படம் அதிதிக்கு புகழைக் கொண்டு வந்தது. இந்தப் படம் அவருக்கு சிறந்த துணை நடிகைக்கான ஸ்க்ரீன் விருதைப் பெற்றுத் தந்தது. ராக்ஸ்டார், மர்டர் 3, பாஸ், வஜீர் போன்ற படங்களும் அதிதிக்கு வெற்றியை கொடுத்த குறிப்பிடத்தக்க படங்களாகும்.
/indian-express-tamil/media/media_files/2025/03/03/aditi-rao-hydari-dulquer-salmaan-841498-845858.webp)
2018 ஆம் ஆண்டு வெளியான 'பத்மாவதி' திரைப்படத்தில் அதிதி நடித்திருந்த ராணி மெஹ்ருன்னிசா கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்திருந்தது. அதேபோல், சமீபத்தில் 'சூஃபியும் சுஜாதா' படத்தில் சுஜாதாவாக நடித்து மலையாள ரசிகர்களின் இதயங்களை வென்றவர் அதிதி. நடிகர் சத்யதீப் மிஸ்ராவை திருமணம் செய்துகொண்ட அதிதி ஒரு கட்டத்தில் அவரை பிரிந்த நிலையில், தெலுங்கில் வெளியான மகா சமுத்திரம் (2021) படத்தின் படப்பிடிப்பு படப்பிடிப்பில் அதிதியும் சித்தார்த்தும் காதலித்தனர்.
/indian-express-tamil/media/media_files/2025/03/03/aditi-rao-hydari-siddharth-wedding-pics-fi-702676.webp)
தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அதிதி ராவ் ஹைதாரி நடிகர் சித்தார்த்திருமணம் செய்து கொண்டனர். மிகவும் ஸ்டைலான நடிகைகளில் ஒருவராக அறியப்படும் அதிதி, கடைசியாக கடந்த 2023-ம் ஆண்டு வெளியான, காந்தி டாக்கீஸ் என் சைலண்ட் படத்தில் நடித்திருந்தார். தற்போது லைனஸ் என்ற ஆங்கில படத்தில் நடித்து வருகிறார்.