Advertisment

ரஜினி படத்தில் அவரை விட இரண்டரை மடங்கு சம்பளம் வாங்கிய நடிகை: ஐஸ்வர்யா ராய்-னு நினைச்சா தப்பு!

கமல்ஹாசனுக்கு ரூ.30 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டது. ரஜினிகாந்த் புதுமுகம் என்பதால் அவருக்கு ரூ.2 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
This actress was paid more money than Rajinikanth

எந்திரன் முதல் பாகத்தில் ரஜினிகாந்த் உடன் ஐஸ்வர்யா ராய்

ஸ்ரீதேவி இந்திய திரையுலகின் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவர். இவர், தென்னிந்திய சினிமா மட்டுமின்றி பாலிவுட்டிலும் தடம் பதித்த சில நடிகைகளில் ஒருவர்.

ஸ்ரீதேவி தனது காலத்தின் பல சூப்பர் ஸ்டார்களுடன் நடித்துள்ளார். மேலும் தனது தனிப்பட்ட நடிப்புத் திறனால் அறியப்பட்டார்.

Advertisment

இவர் ரஜினிகாந்த்துடன் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், ஒரு காலத்தில் நடிகர் ரஜினிகாந்த்-ஐ விட அதிக சம்பளம் பெற்றுள்ளார்.

அந்தப் படம் என்னவென்று தெரிந்தால் நாம் ஆச்சரியம் கொள்வோம். மேலும், இந்த கதையை பிரகாஷ் ராஜின் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற அரட்டை நிகழ்ச்சியில் ஸ்ரீதேவியே கூறியுள்ளார்.

அரட்டை நிகழ்ச்சியின் போது, ஸ்ரீதேவி கதாநாயகியாக நடித்த முதல் படமான மூன்று முடிச்சு படத்தைப் பற்றி நினைவு கூர்ந்தார்.

இத்திரைப்படத்தை கே பாலச்சந்தர் இயக்கியிருந்தார். 1976 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் ஸ்ரீதேவிக்கு ரூ.5000 சம்பளமாக வழங்கப்பட்டது.

கமல்ஹாசனுக்கு ரூ.30 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டது. ரஜினிகாந்த் புதுமுகம் என்பதால் அவருக்கு ரூ.2 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் உடன் உலக அழகி ஐஸ்வர்யா ராய் முதல் நயன்தாரா வரை தற்போது நடித்துள்ளனர். இந்நிலையில் தற்போது ரஜினிகாந்தின் சம்பளம் ரூ.150 கோடிக்கு மேல் என்று கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kamal Haasan Rajinikanth Sridevi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment