Advertisment

வீக் என்ட் சினிமா: ரிலீஸாகும் 8 படங்களில் உங்கள் சாய்ஸ் எது?

பொதுவாக பெரிய படங்கள் பெரும்பாலும் வாரத்திற்கு 2 தான் அதிகபட்சமாக ரிலீஸ் ஆகும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
This Week release - Tamil cinema

March 22 Release: இந்த வாரம் தமிழ் சினிமாவில் மொத்தம் 8 படங்கள் வெளியாகின்றன.

Advertisment

பொதுவாக பெரிய படங்கள் பெரும்பாலம் வாரத்திற்கு 2 தான் அதிகபட்சமாக ரிலீஸ் ஆகும். இதுவே சிறிய பட்ஜெட் படம் என்றால் 5-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகும். அந்த வகையில் இந்த வாரம் 8 படங்கள் வெளியாகின்றன.

அக்னி தேவி, எம்பிரான், பட்டிபுலம், மானசி, உச்சகட்டம், பதனி, சாரல், பைரவிகோட்டை ஆகியவைகள் தான் இந்த வார வரவு.

இயக்குநர் ஜான் பால் ராஜ் இயக்கத்தில் பாபி சிம்ஹா, மதுபாலா, ரம்யா நம்பீசன், சதீஷ் ஆகியோர் நடித்திருக்கும் படம் அக்னி தேவி. முழுக்க முழுக்க அரசியல் கதைகளை பின்னணியாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. முன்னர் அக்னி தேவ் என இப்படத்துக்கு பெயரிடப்பட்டிருந்தது. பாபி சிம்ஹா 5 நாட்கள் நடித்து விட்டு பின்னர் விலகி விட்டதால், அவரின் கதாபாத்திரத்திற்கு டூப் போட்டு இயக்கியிருக்கிறார்கள்.

இதனால் கதை மதுபாலாவுக்கு முக்கியத்துவம் உள்ளதாக மாறியிருக்கிறது. எனவே அக்னி தே(வ்)வியாக மாறியிருக்கிறது டைட்டில்.

இயக்குநர் கிருஷ்ண பாண்டி இயக்கத்தில் ரஜித் மேனன், ராதிகா ப்ரீதி, கல்யாணி நடராஜன், கிஷோர் தேவ் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் எம்பிரான்.

இவற்றுடன் இயக்குநர் சுரேஷ் இயக்கத்தில் யோகி பாபு, அமிதா ராவ் ஆகியோர் முன்னணி ரோலில் நடித்துள்ள பட்டிபுலம்,

இயக்குநர் சுனில் குமார் தேசாய் இயக்கத்தில் தன்ஷிகா, தாகூர் அனூப் சிங், தன்யா ஹோப், கபீர் துகான் சிங், ஷ்ரத்தா தாஸ், ஹர்சிகா பூனஜா, பிரபாகர் மற்றும் வம்சி கிருஷ்ணா நடித்துள்ள உச்சகட்டமும் நாளை வெளியாகிறது.

தவிர, இயக்குநர் நவாஸ் சுலைமான் இயக்கத்தில் நரேஷ் மாதேஸ்வரன், ஹரிசா பேகம், அனூப் சதீசன், அன்பில் மணிமாறன் ஆகியோர் நடித்திருக்கும் மானசி படமும் இந்த வாரம் வெளியாகிறது.

மேற்கூறிய படங்களோடு பதனி, சாரல், பைரவிகோட்டை ஆகியவற்றையும் சேர்த்து மொத்தம் 8 படங்கள் நாளை வெளியாகின்றன.

 

Tamil Cinema Bobby Simha Sai Dhanshika
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment