This weekend movie release in tamil : பிப்ரவரி மாதம் முடிவிலும், மார்ச் மாதம் தொடக்கத்திலும் வசூல் போட்டியில் 4 படங்கள் களமிறங்குகிறது.
சும்மா உட்கார்ந்தால் ஒரு மணி நேரம் கூட 24 மணி நேரம் போல் உணரும் இந்த காலக்கட்டத்தில், 3 மணி நேரம் எப்படி கடந்தது என்றே தெரியாத அளவுக்கு நம்மை மூழ்கடிப்பது தான் சினிமா.
எல்லா வாரமும் ஏதாவது ஒரு புதிய படங்கள் வெளியாவது வழக்கம். பெரிய பட்ஜெட்டில் இல்லையென்றாலும், சிறிய பட்ஜெட்டிலாவது நிச்சயம் இரண்டு படங்கள் வெளியாகும். அந்த வகையில் இந்த வாரமும் நடுத்தர பட்ஜெட்டில் 4 படங்கள் வெளியாகிறது.
weekend movie release : இந்த வார ரிலீஸ் படங்கள்
இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இந்த 4 படங்களுமே முன்னணி நடிகர்களாக மக்கள் மனதில் இடம்பிடித்தவர்களுடையது தான். அருண் விஜய்யின் தடம், ஓவியாவின் 90 எம்.எல்., சேரனின் திருமணம், சாரு ஹாசனின் தாதா 87.
தடம்
இயக்குநர் : மகிழ் திருமேனி
நடிகர்கள் : அருண் விஜய், தன்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட், சோனியா அகர்வால் மற்றும் வித்யா பிரதீப்.
இசையமைப்பாளர் : அருண் ராஜ்
ஒளிப்பதிவு : கோபிநாத்
90 எம்.எல்
இயக்குநர் : அனிதா உதீப்
நடிகர்கள் : ஓவியா, மசூம் ஷங்கர் மற்றும் அன்சன் பால்
இசையமைபாளர் : சிம்பு
தயாரிப்பு : என்விஸ் எண்டர்டெயின்மெண்ட்
திருமணம் சில திருத்தங்களுடன்
இயக்குநர் : சேரன்
நடிகர்கள் : உமாபதி ராமய்யா, சேரன், காவ்யா சுரேஷ், சுகன்யா, தம்பி ராமய்யா, எம்.எஸ். பாஸ்கர் மற்றும் ஜெயபிரகாஷ்
இசையமைப்பாளர் : சித்தார்த் விப்பின்
தாதா 87
இயக்குநர் : விஜய் ஸ்ரீ ஜி
நடிகர்கள் : சாரு ஹாசன், கீர்த்தி சுரேஷ் பாட்டி சரோஜா, ஜனகராஜ்
இசையமைப்பாளர் : லியாண்டர் லீ மார்ட்டி