scorecardresearch

பிக்பாஸ் அல்டிமேட்.. அனிதா, பாலாஜி, ஷாரிக், அபிநய் மீண்டும் பிபி வீட்டுக்கு வருகிறார்களா?

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்து சுவாரசிய தகவல் இப்போது வெளியாகியுள்ளது.

BB Ultimate Show
Three contestants including vanitha confirmed for BB Ultimate Show

பிக் பாஸ் ஜுரம் இன்னும் தீரவில்லை. அதற்குள் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி, ஞாயிற்றுக்கிழமை (ஜன;30) பிரமாண்டமான கொண்டாட்டங்களுடன் தொடங்க உள்ளது.

டிஸ்னி பளஸ் ஹாட் ஸ்டாரில்’ ஒ.டி.டி.யில் முதன்முதலாக ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்து சுவாரசிய தகவல் இப்போது வெளியாகியுள்ளது.

#YaarAnthaHousemate (யார் அந்த ஹெளஸ்மேட்) என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி, மீண்டும் பிபி வீட்டிற்குத் திரும்பும் போட்டியாளர்கள் யார் என்பது குறித்து, நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் க்ளூ தர தொடங்கி உள்ளனர்.

அந்தவகையில், பாடலாசிரியர் சினேகன் தான், பிபி வீட்டில் கால் பதிக்கும் முதல் போட்டியாளர் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

சினேகன் பிரபலமான பாடலாசிரியர் என்றாலும், பிக் பாஸ் சீசன் 1 மூலம் டிவி பார்வையாளர்களுக்கு நெருக்கமாகிவிட்டார். அதன் மூலம் அந்த சீசனின் 2ஆம் இடத்தையும் பிடித்தார். முதல் சீசனில், வீட்டில் உள்ள அனைவரையும் கட்டிப்பிடித்ததற்காக சினேகன் விமர்சிக்கப்பட்டார்.

சினேகனைத் தொடர்து, 2வது போட்டியாளரைப் பற்றிய க்ளூவையும் தயாரிப்புக் குழு வழங்கியது. பிங்க் நிற தொப்பியுடன், போட்டியாளர் கண்ணாடி முன் நின்று, மொபைல் போனில் செல்ஃபி எடுக்கும் போட்டோவை பகிர்ந்தது.

அதைப்பார்த்த பிபி ஃபேன்ஸ்,  ஜூலி தான் 2வது போட்டியாளர் என கூறிவருகின்றனர்.

2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது முழக்கங்களை எழுப்பியதில் பிரபலமானவர் ஸ்டாஃப் நர்ஸ் ஜூலி. அந்த புகழ் மூலம், பிக்பாஸ் தமிழின் தொடக்க சீசனில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்றார். ஆனால் எபிசோட் செல்லச் செல்ல, சமூக வலைதளங்களில் வெறுப்பையும் சம்பாதித்தார். தற்போது ஜூலி மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஜன;26 அன்று வெளியான ப்ரோமோவில், ஜோதிடர் ஒருவர் வீட்டின் முன் நின்று, வரவிருக்கும் போட்டியாளரின் கோபத்திற்கு எல்லையே இல்லை, ஆனால் அவர் ஒரு சிறந்த சமையல்காரர் என்று, நிகழ்ச்சியின் 3வது போட்டியாளரைப் பற்றி க்ளூவை வழங்குகிறார்.

எனவே, வனிதா விஜயகுமார் தான், 3வது போட்டியாளர் என்பதை ரசிகர்கள் உறுதிப்படுத்தினர்.

வணிதா, பிக்பாஸ் தமிழ் 3 இல் மிகவும் சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்ததார். அதைத் தொடர்ந்து, “குக் வித் கோமாளி” சமையல் ஷோவில் பட்டத்தையும் வென்றார்.

இப்போது 3வது ப்ரோமோ மூலம் வனிதா விஜயகுமார் மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிற்குள் நுழைகிறார். அவரது ரீ-என்ட்ரி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

கடந்த சீசன்களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த அதே நேரம் விமர்சனங்களையும் பெற்ற பல போட்டியாளர்கள் பிபி வீட்டிற்கு மீண்டும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில் தாடி பாலாஜி, பாவனி, ஷாரிக், அனிதா, அபிநய், சுஜா வருணி, ஷெரின், பாலாஜி முருகதாஸ் ஆகியோர் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு கன்ஃபார்ம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனவே இனி பிக்பாஸ் வீட்டில் சண்டை, சச்சரவுக்கு பஞ்சமே இருக்காது. ஆனால் பிக்பாஸூக்கு தான் வேலை அதிகமாக இருக்கும் என ரசிகர்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Three contestants including vanitha confirmed for bb ultimate show