Advertisment

நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வை சித்தரிக்கும் 1990-களின் 3 திரைப்படங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Three Tamil mvoies that perfectly capture middle-class life of the 1990s - நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வை சித்தரிக்கும் 1990-களின் 3 திரைப்படங்கள்

Three Tamil mvoies that perfectly capture middle-class life of the 1990s - நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வை சித்தரிக்கும் 1990-களின் 3 திரைப்படங்கள்

மனோஜ் குமார் ஆர்

Advertisment

சாதாரண மக்களின் வாழ்க்கையை அழகாக, அன்பாகப் பிரதிபலிக்கும் வகையில் 1990-களில் சில தமிழ் திரைப்படங்களை உருவாக்கியவர் இயக்குனர் வி.சேகர்.

1990-களில் தமிழ் திரைப்படத்துறையானது கமல்ஹாசன், ரஜினிகாந்த் என்ற இருவரின் ஆதிக்கத்தில் இருந்தது. இவர்கள் இவருவரும் தங்கள் திரைவாழ்க்கையை நினைவு கூறும் திரைப்படங்களில் அப்போது நடித்தனர். இன்னொருபுறம் இயக்குனர் மணிரத்தினம், திரை உருவாக்கத்தின் வணிக வெளியில் தனித்துவமான பாணியில் தம்மை தானே செதுக்கிக் கொண்டு படங்களை உருவாக்கினார். அப்போதுதான் திரை உலகில் கால்பதிக்கத் தொடங்கி இருந்த இயக்குனர் ஷங்கர் தமது படங்களின் பெரும் அளவிலான கற்பனை மற்றும் பெரும் அளவிலான பட்ஜெட் காரணமாக ஒவ்வொருவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். இப்போதைய மின்னும் திரைநட்சத்திரங்களாக இருக்கும் விஜய், அஜித் மற்றும் சூர்யா அப்போதைய புதிய முகங்கள். இவர்கள் அந்த காலகட்டத்தில் தங்களுடைய தனித்திறமைகளை வெளிப்படுத்துவதில் ஆண்டுகளின் தொலைவில் இருந்தனர். இதே காலகட்டத்தில்தான் காஷ்மீர் தீவிரவாதம் (ரோஜா, தில்ஸே),உயர் அதிகார மட்டங்களில் ஊழல் (இந்தியன், முதல்வன்), ஜாதி அரசியல் (தேவர் மகன்) மும்பை தாதாக்கள் (பாட்ஷா) மற்றும் இந்து-இஸ்லாமியர் வன்முறை (பம்பாய்) ஆகிய பெரிய பிரச்னைகளை கையாண்ட கதைகளைக் கொண்ட படங்கள் அதிக அளவு வந்ததை நாம் பார்த்தோம்.

திரை உலகின் தன்மையில் ஏற்பட்ட அதிர்வு மாற்றத்துக்கு மத்தியில் சில திரை இயக்குனர்கள் மிகவும் சாதாரணமான இன்னும் கூட குடும்பங்களில் நிகழ்ந்து கொண்டிருக்கும் கதையில் பயணித்தனர்.

சாதாரண மக்களின் வாழ்க்கையை அழகாக, அன்பாகப் பிரதிபலிக்கும் வகையில் 1990-களில் ஒரு சில தமிழ் திரைப்படங்களை உருவாக்கியவர்களில் இயக்குனர் வி.சேகரும் ஒருவர்.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க 

அவர், நடுத்தரக்குடும்பங்களின் போராட்டங்களை, அவர்களின் அன்றாட அபிலாஷைகள், இந்தியாவின் வளர்ச்சியில் பாலின இயங்குவியல் மாற்றம் ஆகியவற்றை மிகவும் எதார்த்தமாக சித்தரித்தார். 1990-களில் குறைத்து மதிப்பிடமுடியாத இயக்குனர் என்று நான் நம்புகின்றேன். அவருடைய இயக்கத்தில் வெளியான படங்களை பற்றி நாம் இப்போது விவாதிப்போம். அவருடைய படங்கள், இப்போதைய தலைமுறைக்கு , நாட்டின் நடுத்தர வகுப்பின் முகத்தை மாற்றிய ஒரு காலகட்டத்தின் தெளிவான காட்சியை கொடுக்கும்.

‘வரவு எட்டணா, செலவு பத்தணா’ என்பதன் பொருள், வருமானம் எட்டு ரூபாய் என்றால், செலவு பத்துரூபாய் என்பதாகும். இது வி.சேகரின் இயக்கத்தில் வெளியான ஒரு திரைப்படம். இந்த படத்தைப் பார்க்கும்போதெல்லாம் ஒருபோதும் நான் சலிப்படைந்ததில்லை. 25 ஆண்டுகள் கடந்த பின்னும், நடுத்தர வர்க்கத்தினரின் தாழ்மையான கவனம் ஈர்க்கும் ஆய்வானது இன்னும் உணரக்கூடியதாக இருக்கிறது.

சிவராமன் (நாசர்) ஒரு அரசு அலுவலர். நீண்டநாட்களாக நேர்மையானவராக இருக்கிறார். ஆசைகள் ஏதும் அற்றவர். ஒரு சாதாரண மனிதர். அலுவலக நேரம் முடிந்ததும், நேராக வீட்டுக்குச் செல்பவர். ஒவ்வொரு மாதம் தொடக்கத்திலும் தம்முடைய சம்பளம் முழுவதையும் மனைவி லட்சுமி(ராதிகா)-விடம் கொடுத்து விடுபவர். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். அழகிய குடும்பம், மிதமான வீட்டு வருமானத்தை ஏற்றுக் கொண்டு குடும்பம் நடைபோடுகிறது. அவர்களின் பக்கத்து வீட்டுக்கார ர்கள், பீட்டர் (வடிவேலு) ஒரு ஆட்டோ டிரைவர், அவரது மனைவி எலிசபத்(கோவை சரளா). இந்த குடும்பங்கள் நாளொன்றுக்கு மூன்று வேளை உண்ணும் நிலைமையில் இருந்தன. அவர்களுக்கு வசிப்பதற்கு கூரையும் இருந்தது, அவர்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வியும் அளித்து வந்தனர். ஆனால், இந்த விஷயங்கள் எல்லாம், மருதபாண்டி (கவுண்டமணி) என்ற உள்ளூர் அரசியல்வாதி குடும்பத்துடன் இவர்கள் வீட்டருகே குடிவந்ததும் மாறத்தொடங்கியது. அவருடைய மனைவி தங்களுடைய பணக்காரத்தனத்தை வெளிச்சம் போட்டுக்காட்டுவார். தமது கண்கள் காண்பதை எல்லாம் வாங்கும் திறன் கொண்டவர்.

லட்சுமி, எலிசபத் இருவரும் நீண்டகாலம் அதே அடக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. கையுக்கும், வாயுக்குமான பிழைப்பில் அவர்கள் நீடித்திருக்க விரும்பவில்லை. அவர்கள் கடமைப்பட்டு இருக்க வேண்டும் என்று அவர்களின் கணவர்கள் எதிர்பார்த்தனர். ஒரு தொலைகாட்சி பெட்டி, மிக்ஸர் கிரைண்டர், குளிர்சாதனப்பெட்டி, வாஷிங் மிஷின் ஆகியவை வீட்டில் இருக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்த்தனர். தவிர வாரம் தோறும் சினிமாவுக்குச் செல்ல வேண்டும் , கடற்கரைக்குச் செல்ல வேண்டும் என்றும் விரும்பினர். சிவராம னின் மகன், தங்களுடைய பக்கத்து வீட்டு பணக்கார ர் போல தம்முடைய பிறந்தாளை பெரிய கேக் வெட்டிக் கொண்டாட வேண்டும் என்று விரும்பினான். ஆம் இப்போது அந்த குழந்தைகள் ஆங்கில கான்வென்ட் பள்ளிக்கு போக வேண்டும். இந்த அனைத்து ஆசைகளும் மிகவும் சிறியதா? இல்லை? உண்மையில் இல்லை. மீண்டும் அந்த நாளில், குடும்பத்தில் ஒரே ஒருவர் மட்டுமே சம்பாதிக்கும் ஒரு குடும்ப்பத்தில், அவரது சட்டப்பையில் வைத்திருக்கும் பணம் குடும்பத்துக்காக ஒதுக்கப்பட்டவை. இவையெல்லாம் ஆடம்பரமானவை.

தமது குடும்பத்தை ஒரு திரைப்படத்துக்கு அழைத்து செல்வதற்கு சிவராமன் இணங்கி இருக்கிறார். அதை ஒரு காட்சியாக கருதினால், அவர் சினிமாவுக்குப் போக ஒரு ஆட்டோவில் செல்ல எவ்வளவு செலவாகும் என்று பணத்துக்காக பல கணக்கீடுகளை செய்ய வேண்டி இருக்கிறது. புக் மை ஷோ, ஊபர் என்ற வசதிகளைக் கொண்ட யுகத்தில் வாழ்வோருக்கு குடும்பத்துடன் எளிதாக வெளியில் செல்வதைப் பார்ப்பது ஒரு தலைமுறைக்கு உற்சாகமாக இருக்கலாம். இன்னும் கூட இந்த காட்சி வேடிக்கையாக இருக்கலாம். ஆனால், அதுதான் அந்த காலகட்டத்தின் நிதர்சனம்.

திரைப்படத்தில், சிவராமன் குடும்பத்தினர் நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்று கோரும்போது, குடும்பத்தின் ஏழ்மையை காட்சி பிரதிபலிக்கிறது. அவர்களின் நாள்தோறும் அதிகரிக்கும் ஆசை சிவராமனை தவறான முடிவை நோகித் தள்ளுகிறது. ஆனால், இன்றைக்கு நாம் எங்கு நிற்கின்றோம் என்று பார்க்கும்பொழுது, லட்சுமி படித்தவர், தவறான முடிவுக்குப் போகும்முன்பு, சிவராமன் அவளுடைய உதவியை கேட்டிருக்கலாம். வீட்டின் வருவாயை அதிகரிக்க அவள், தினசரி வேலைக்குச் சென்றிருக்கலாம். ஆனால், ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், இந்த கதை உருவாக்கிய காலத்தில், பெண்களை தைரியமாக வேலைக்கு அனுப்பப்படுவது வீட்டில் உள்ள ஆண்களை அவமதிப்பதாகக் கருதப்பட்டது. குடும்பத்தின் வருவாய் ஈட்டும் ஒரே ஒரு நபரான , முழுமையான தலைவர் என்பதை ஆண் அனுபவிக்கிறார். நமது கூட்டு பச்சாதாபத்தையும் அனுபவிக்கிறார்.

வி.சேகரின் ‘காலம் மாறிபோச்சு’ போன்ற பிந்தைய கால படங்கள் போன்றவை, மகள் என்றாள் சுமை என்றும், மகன் என்றால் குடும்பத்தின் சொத்து என்றும் பெற்றோர்கள் கருதும் பிற்போக்கு சிந்தனையை கையாண்டது. எப்படி ஒரு பெண் நிதி சுதந்திரத்தை அடைகிறாள் என்றும், அதன்மூலம் அந்த குடும்பத்தில் பாலின இயங்குவியல் மாற்றம் ஏற்படுவதையும் ஆராய்கிறது இந்தப் படம்.

ஒரு நகைச்சுவை தொடர்பான காட்சியில் கோவை சரளா எனும் சுந்தரி தமது கணவர் சேகரிடம் (வடிவேலு)”நானும் சம்பாதிக்கப் போகின்றேன். எனவே, இனிமேல் வீட்டின் வேலைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் . என்னுடைய அனுமதி இல்லாமல் என்னைத் தொடக் கூடாது” என்று சொல்வாள். காயம்பட்ட ஈகோவுடன் கூடிய சேகர் , சுந்தரியின் முதல் அடியை சுதந்திரத்தை நோக்கியதாக லேசாக எடுத்துக் கொள்ளவில்லை. பழைய முறைப்படி அவளுக்கு பாடம் கற்பிக்க அவன் முயன்றான். ஆனால், சுயசார்புள்ள சுந்தரியின் திறனை அவன் உணரவில்லை. சுந்தரி, சேகருக்கு ஒரு நல்ல அடி கொடுத்தாள். இது வாழ்க்கையை நடத்தும் வகையில் அவனை உருவாக்கியது. இந்த காட்சி ஒரு வன்முறையானது. ஆனால், அந்த சமயத்தில் இது பெரும் வரவேற்பை பெற்றது. ஆகையால், அதன் பின்னர் வந்த பெரும்பாலான திரைப்படங்களில் , நகைச்சுவை விளைவுடன் கூடிய காட்சியில் கோவை சரளா வடிவேலுவை அடிப்பது போன்ற ஒரு காட்சியாவது வந்தது.

வி.சேகர், விரலுக்கேத்த வீக்கம் திரைபட்டத்தில் மேலும் இதே போன்ற கருத்தை ஆராய்ந்தார். நமது வருவாய் அளவுக்கு ஏற்ப நமது செலவினங்கள் இருக்க வேண்டும் என்று இந்த படம் அறிவுறுத்தியது. 1999-ம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படம், தாங்கள் சம்பாதிப்பதால், தங்கள் மனைவியரை விட தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என எண்ணும் மூன்று ஆண்களைச் சுற்றிய கதையாக இருந்தது. மூன்று பேரும் வேலை இழந்த பின்னர் திடீரென குழப்பம் ஏற்படுகிறது. அவர்களின் மனைவியர் சம்பாதிக்கத்தொடங்குகின்றனர்.

இந்தத்திரைப்படம் 20-ம் நூற்றாண்டின் இறுதியில் வெளியானது. பெண்கள் நிதி சுதந்திரத்தை அடைவது மிகவும் முட்டாள் தனமானது என்பதையும் முன்னேற்றத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்பதையும் நிறுத்தும் தீர்க்கதரிசனத்தை இது காட்சிப்படுத்தியது.

தமிழில் கே.பாலசுப்ரமணி

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment