ஏண்டா இதெல்லாம் ஒரு கதையா? இதுக்கு எதுக்குடா சிவாஜி? பாரதிராஜாவை திட்டி தீர்த்த இளையராஜா: ஆனா படம் சூப்பர் டூப்பர் ஹிட்!

பாராதிராஜாவின் இந்த படம் பிடிக்கவில்லை என்று இளையராஜா கூறிய ஒருப்படம். ஆனால் படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. அது என்ன படம் தெரியுமா?

பாராதிராஜாவின் இந்த படம் பிடிக்கவில்லை என்று இளையராஜா கூறிய ஒருப்படம். ஆனால் படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. அது என்ன படம் தெரியுமா?

author-image
WebDesk
New Update
bharathi raja ilayaraja

தமிழ் திரையுலகின் இயக்குனர் இமயம் பாரதிராஜா, தனது தனித்துவமான கிராமியப் படைப்புகளுக்காக என்றும் போற்றப்படுகிறார். '16 வயதினிலே' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், தொடர்ந்து 'புதிய வார்ப்புகள்', 'கிழக்கே போகும் ரயில்', 'சிகப்பு ரோஜாக்கள்' எனப் பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார்.

Advertisment

அந்த வரிசையில், 1985 ஆம் ஆண்டு வெளியான 'முதல் மரியாதை' திரைப்படம், தமிழ் சினிமாவில் ஒரு அழியாத முத்திரையைப் பதித்தது. சிவாஜி கணேசன், ராதா, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம், ஒரு கிராமிய காவியமாக இன்றும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஒரு சுவாரசியமான தகவல் வாவ் தமிழா யூடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

இந்தத் திரைப்படத்தின் உருவாக்கம் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வைக் கொண்டுள்ளது. படத்தின் கதையை நடிகர் திலகம் சிவாஜி கணேசனிடம் பாரதிராஜா விவரித்தபோது, அவர் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால், படப்பிடிப்பின் போது ஒரு காட்சியில் மரத்திற்குப் பின்னால் இருந்து எட்டிப் பார்க்கச் சொன்னபோது, "நான் சிவாஜிடா, எதுக்கு எட்டிப் பார்க்கணும்?" என்று நகைச்சுவையுடன் கேட்டதாகக் கூறப்படுகிறது.

Sivaji Muthal Mariyathai.

Advertisment
Advertisements

படப்பிடிப்பு முடிந்து, படக்குழுவினர் மற்றும் நண்பர்களுக்குப் பின்னணி இசை இல்லாமல் படம் திரையிடப்பட்டது. படத்தை பார்த்த சிவாஜி குடும்பத்தினர் படத்தை வெகுவாகப் பாராட்டினர். ஆனால், பிரபல தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா இருவரும் படம் ஓடாது என்று வெளிப்படையாகத் தெரிவித்தனர். பின்னணி இசை சேர்ப்புக்காகப் படம் பார்த்த இளையராஜா, "இந்த படம் ஓடாது. என்ன படம் எடுத்திருக்க 3 நாள் கூட தாண்டாது" என்று பாரதிராஜாவை விமர்சித்தார்.

இளையராஜாவின் இந்த எதிர்மறை கருத்துக்களை பாரதிராஜா பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சிவாஜி கணேசனை வெகுவாகக் கவர்ந்த "பூங்காத்து திரும்புமா" பாடல் உட்பட, படத்தின் பாடல்கள் அனைத்தும் பெரும் வரவேற்பைப் பெற்றன.

படம் வெற்றி பெற்ற பிறகு, பாரதிராஜா இளையராஜாவிடம் "உனக்கு பிடிக்காத கதைக்காடா இப்படி போட்டுருக்க?" என்று வியந்து கேட்டதாக தகவல் உள்ளது. இந்தப் படம், பாரதிராஜாவின் திறமைக்கு ஒரு சான்றாக அமைந்தது. இளையராஜாவின் ஆரம்பக்கட்ட விமர்சனத்தையும் தாண்டி, "முதல் மரியாதை" ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் படமாக மாறி, தமிழ் சினிமாவின் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக நிலைத்துவிட்டது.

Bharathiraja Ilayaraja

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: