New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/18/gv1pKkYbpbk6z6Lk1SpK.jpg)
தக் லைப் திரைப்படம் ஜூன் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது, படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மே 24 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்திய சினிமாவின் இரண்டு ஜாம்பவான்களான இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆகிய இருவரும் சுமார் 36 ஆண்டுகளுக்கு பின்பு இணைந்துள்ள ‘தக் லைப்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
1987 ஆம் ஆண்டு வெளியான "நாயகன்" திரைப்படத்திற்குப் பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் இருவரும் இணைந்துள்ள படம் ‘தக் லைப்’ நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் இணைந்திருப்பதால், இப்படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். தற்போது சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் இப்படத்தின் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.
கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இணைந்து திரைக்கதை எழுதியுள்ள இப்படத்தில், கமல்ஹாசன் பல்வேறு மாறுபட்ட தோற்றங்களில் மிரட்டலாகக் காட்சியளிக்கிறார். ட்ரெய்லரின் ஆரம்பத்தில் கமல்ஹாசனின் கம்பீரமான குரல் ஒலிக்கிறது. "நீ என் உயிரைக் காப்பாற்றினாய், எமனிடமிருந்து என்னைப் மீட்டெடுத்தவன். நம் இருவரின் தலைவிதியும் ஒன்றாக எழுதப்பட்டது. இனிமே நீயும் நானும் ஒன்றிணைந்தவர்கள். கடைசி வரைக்கும்," என்ற வசனம் படத்தின் ஆழமான கதைக்களத்தை உணர்த்துகிறது.
தொடர்ந்து, சிம்புவின் கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்படுகையில், கமல்ஹாசன் பின்னணியில் பேசுகிறார். "நான் 8 அடி பாஞ்சா நீ 18 டா என்று கமல் சொல்ல, அதற்கு சிம்பு 16 என்று சொல்கிறார். அதற்கு கமல்ஹாசன், "ஆம், யுவர் மெஜஸ்டி," என்று பதிலளிக்கிறார். இறுதியில், கமல்ஹாசன் சிம்புவை தனது வாரிசாக அறிவிக்கிறார். ட்ரெய்லரின் திருப்புமுனையாக, சிம்பு கமல்ஹாசனுக்கு எதிராகத் திரும்புவது காட்டப்படுகிறது.
இப்படத்தில் நாசர், த்ரிஷா, ஐஸ்வர்யா மற்றும் மகேஷ் மஞ்ச்ரேகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ட்ரெய்லரின் முடிவில், கமல்ஹாசனின் கதாபாத்திரம், "இது எமனுக்கும் எனக்கும் நடக்கற கதை, நீயா நானா வா," என்று கூறுவது படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரிக்கிறது.
"தக் லைப்" திரைப்படம் 2022 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கும் இப்படம், கமல்ஹாசனின் 234வது திரைப்படமாகும். இந்த கேங்ஸ்டர் ஆக்ஷன் திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் ஜூன் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.