புதன்கிழமை ஒரு பெரிய ஓப்பனிங்க்கு பிறகு, துணிவு மற்றும் வாரிசு இரண்டு படங்களும் இரண்டாவது மற்றும் மூன்றாவது நாளில் பெரிய வீழ்ச்சிகளை சந்தித்தன. அஜித் குமாரின் ஹெயிஸ்ட் படத்தை விட, தளபதி விஜய்யின் வாரிசு ஒரு விளிம்பில் இருப்பது போல் தெரிகிறது.
இண்டஸ்ட்ரி டிராக்கர் சாக்னில்க் கருத்துப்படி, வெள்ளிக்கிழமை அன்று துணிவு தோராயமாக ரூ.8.50 கோடி வசூலித்தது. இருப்பினும், இதுவரை படத்தின் மொத்த வசூல் சுமார் 52 கோடி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தகவல்களின்படி, துணிவு 3 ஆம் நாளில் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 51.32% ஆக்கிரமிப்பைப் பெற்றுள்ளது.
துணிவு படம் வெளிநாடுகளில் கவனத்தை ஈர்த்து வருவதாக வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலா குறிப்பிட்டார். மேலும் வட அமெரிக்காவில் அஜித்தின் அதிக வசூல் செய்த படமாக இது அமைந்தது.
ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகிய துணிவு படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கென், வீரன், அஜய் மற்றும் ஜிஎம் சுந்தர் ஆகியோரும் நடித்துள்ளனர். பொங்கல் கொண்டாட்டங்கள் மற்றும் தொடர் விடுமுறையில் படத்துக்கு வசூல் மேலும் அதிகரிக்கக்கூடும், குறிப்பாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வலுவான அதிகரிப்பைக் காணலாம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் துணிவுக்கு 3 நட்சத்திரங்களை வழங்கியது. விமர்சனத்தில்’ துணிவு படம், அஜித் நடந்து, நடனமாடும், வெறி பிடித்தபடி அலறும் வரையில் ரசிக்க வைக்கும். அது நிதானமான தருணத்தில், அது அதன் பொல்லாத அழகை இழக்கிறது. எச்.வினோத்துக்கு இது தெரியும், அதனால்தான், ‘மக்கள் எப்பொழுதும் மகிழ்விப்பவர்களைத்தான் விரும்புகிறார்கள், தொடர்ந்து மெசெஜ் வழங்குபவர்களை அல்ல’ என்று படத்தில் ஏதோ ஒரு வசனம் இருக்கிறது. ஒரு வேளை, அது படங்களுக்கு உண்மையாக இருக்கலாம்’.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“