அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் உலகம் முழுவதும் 4வது நாள் பாக்ஸ் ஆஃபீஸ் வசூலில் ரூ.100 கோடி வசூலைத் தாண்டியுள்ளது. உலக அளவில் வெளியாகி உள்ள துணிவு திரைப்படம் வெற்றிகரமாக வசூலைக் குவித்து வருகிறது.
இயக்குனர் ஹெச். வினோத் இயக்கியுள்ள துணிவு திரைப்படம், ஒரு வங்கி கொள்ளை த்ரில்லர் திரைபடம். ஜனவரி 11-ம் தேதி வெளியான துணிவு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 4 நாள் வசூலில் உலக அளவில் டாப்பில் இருந்து வருகிறது.
அஜித் குமார் நடித்த துணிவு திரைப்படம் ரிலீசான் முதல் நாளிலில் இருந்தே பிரமாண்ட வசூலைத் தொடங்கி வெற்றி நடைபோட்டு வருகிறது. துணிவு முதல் நாளிலேயே ரூ.50 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. தளபதி விஜய்யின் வாரிசு படத்துடன் பாக்ஸ் ஆபிஸ் மோதலுக்குப் பிறகும், துணிவு பாக்ஸ் ஆபிஸில் தடுக்க முடியாத வெற்றியைக் குவித்த உலகளவில் வசூலில் ரூ. 100 கோடியைத் தாண்டியுள்ளது.
பொங்கல் பண்டிகை விடுமுறையை குறிவைத்து அஜித்தின் துணிவு திரைப்படமும் விஜய்யின் வாரிசு திரைப்படமும் ஜனவரி 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானடு. அஜித்தின் துணிவு திரைப்படம் விஜய்யின் வாரிசு திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸில் போட்டி போட்டுக்கொண்டு மோதியது. பாக்ஸ் ஆபிஸ் எண்ணிக்கையில் எந்தப் படம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், துணிவு அபாரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. துணிவு திரைப்படம் வாரிசு திரைப்படத்தைப் போலவே, 100 கோடி வசூல் செய்தது மட்டுமின்றி சர்வதேச மார்க்கெட்டையும் கைப்பற்றி வருகிறது. உண்மையில், அஜித்தின் மற்ற் எல்லா திரைப்படங்களையும் விட துணிவு படம் தான் அதிக வசூல் செய்த படமாக அமைந்துள்ளது.
சினிமா பாக்ஸ் ஆஃபீஸ் ஆய்வாளர் ரமேஷ் பாலா, “துனிவு திரைப்படம் உலக அளவில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ. 100 கோடியைத் தாண்டியுள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹெச். வினோத் இயக்கிய துணிவு படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். மங்காத்தா படத்திற்கு பிறகு, அஜித் குமார் எதிர் கதாநாயகனாக நடிக்கும் படம் வங்கி கொள்ளை த்ரில்லர் படமான துணிவு படத்தில், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், அமீர், பாவ்னி, பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
அஜித்தின் துணிவு திரைப்படம் தெலுங்கில் ‘தெகிம்பு’ என்ற பெயரில் வெளியாகி உள்ளது. இந்த படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“