Advertisment
Presenting Partner
Desktop GIF

துணிவு vs வாரிசு: பிளாக்பஸ்டர் எந்தப் படம்? ரெட் ஜெயன்ட் அறிவிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வெளியான அஜித்தின் துணிவு திரைப்படம் விஜய்யின் வாரிசு திரைப்படம் இவற்றில் எந்த படம் பிளாக்ஸ்பஸ்டர் வெற்றி என்று போட்டி நிலவிவரும் நிலையில், ரெட் ஜெயன்ட் மூவீஸ் எந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் என்று அறிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
thunivu box office collection day 4, thunivu box office collection worldwide day 4, துணிவு, அஜித், துணிவு பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்‌ஷன் 4 நாள், பாக்ஸ் ஆஃபீஸ் வசூல், வாரிசு பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்‌ஷன், வாரிசு, விஜய், thunivu box office collection, thunivu box office, varisu box office collection, varisu box office collection worldwide day 4, thunivu box office collection, varisu box office collection day 4, Varisu, Vijay

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வெளியான அஜித்தின் துணிவு திரைப்படம் விஜய்யின் வாரிசு திரைப்படம் இவற்றில் எந்த படம் பிளாக்ஸ்பஸ்டர் வெற்றி என்று போட்டி நிலவிவரும் நிலையில், ரெட் ஜெயன்ட் மூவீஸ் எந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் என்று அறிவித்துள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக விஜய்யும் அஜித்தும் கோலோச்சி வருகின்றனர். விஜய் - அஜித் படங்கள் வெளியாகிறது என்றால் சமூக ஊடகங்களில் ரசிகர்களின் ட்ரெண்டிங் தாக்குதலில் களேபரமாகிவிடும். இந்த பொங்கல் பண்டிகைக்கு இரண்டு நடிகர்களின் படமும் வெளியாகி பாக்ஸ் ஆஃபீஸைத் திணறடித்துள்ளது.

நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணி 3-வது முறையாக இணைந்துள்ள படம்தான் துணிவு திரைப்படம்.

அதே போல, நடிகர் விஜய், பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சியும் இணைந்து தில் ராஜூ தயாரிப்பில் உருவாகியுள்ள படம்தான் வாரிசு.

நடிகர் விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு இரண்டு திரைப்படங்களும் ஜனவரி 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இரு படங்களும் ஒரே நாளில் வெளியானதால் இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

அஜித்தின் துணிவு திரைப்படம் ஜனவரி 11-ம் தேதி நள்ளிரவு 1மணிக்கு வெளியானதால், ரசிகர்கள் நள்ளிரவிலும் கொண்டாட்டத்தில் குதித்தனர். இதனால், சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரசிகர்கள் ஒரே நேரத்தில் அதிக அளவில் குவிந்ததால் பொதுச்சொத்துக்களுக்கு சேதங்களும் ஏற்பட்டன. மேலும், இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

விஜய் - அஜித் இரு பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸாகும் போதெல்லாம் யார் நம்பர்.1 என்ற போட்டி ரசிகர்கள் மத்தியில் உருவாகிறது. இரண்டு படங்களும் 100 கோடி வசூலைத் தாண்டிவிட்டதாக தெரிவிக்கின்றனர்.

வாரிசு தயாரிப்பு தரப்பில் ‘பொங்கல் வின்னர்’ என போஸ்டர் வெளியானதும், துணிவு தயாரிப்பு தரப்பில் ‘ரியல் வின்னர்’ என்ற போஸ்டர் வெளியாகியது.

இந்நிலையில், தற்போது துணிவு படத்தின் தமிழ்நாடு வெளியீட்டாளர் ரெட் ஜெயண்ட் நிறுவனம் எந்த படம் பிளாக்பஸ்டர் என்று அறிவித்துள்ளது.

துணிவு படத்தின் தமிழ்நாடு வெளியீட்டாளர் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், “இரண்டு படங்களுமே வெற்றிதான். உங்களுக்கு அருகே இருக்கும் தியேட்டரில் துணிவு ப்ளாக்பஸ்டர், வாரிசு ப்ளாக்பஸ்டர் படத்தை பாருங்கள்” என நடுநிலையாக பதிவிட்டுள்ளனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamil Cinema Ajith Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment