scorecardresearch

அஜித் – விக்னேஷ் சிவன் இணையும் படத்தில் ஜி.பி.முத்து?

டிக்டாக் வீடியோ மூலம் பிரபலமான ஜி.பி.முத்து தற்போது யூடியூப் வீடியோக்கள் மூலம் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

அஜித் – விக்னேஷ் சிவன் இணையும் படத்தில் ஜி.பி.முத்து?

டிக்டாக் வீடியோ மூலம் பிரபலமாகி திரைப்பட நடிகராக உயர்ந்துள்ள ஜி.பி.முத்து தற்போது ஒரு சில படங்களில் நடித்து வரும் நிலையில், அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள ஏ.கே.62 படத்தில் ஜி.பி.முத்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

டிக்டாக் வீடியோ மூலம் பிரபலமான ஜி.பி.முத்து தற்போது யூடியூப் வீடியோக்கள் மூலம் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில், கடந்த மாதம் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். ஆனால் ஒரு வாரத்திலேயே தனது மகன் உடல்நிலை சரியில்லை என்று கூறி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

தொடர்ந்து தனது குடும்பத்துன் தீபாவளி கொண்டாடிய ஜி.பி.முத்து சமீபத்தில் நடந்த ஓ மை கோஸ்ட் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். சன்னி லியோன் லீடு ரோலில் நடித்தள்ள இந்த படத்தில் ஜி.பி.முத்து முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் ஒரு சில படங்களில் நடித்து வரும் ஜி.பி.முத்து அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள ஏ.கே.62 படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில், பேசிய ஜி.பி.முத்து அஜித்தின் அடுத்த படம் குறித்து தயாரிப்பாளர்களுடன் பேசி வருவதாக தெரிவித்துள்ள நிலையில், இந்த படத்தில் அவரது கேரக்டர் காமிக் சாயலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் அடுத்து அஜித் நடிக்க இருக்கும் படத்தை இயக்க உள்ளார்.

தற்காலிகளமாக ஏ.கே.62 என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், த்ரிஷா இந்த படத்தில் நாயகியாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இதனிடையே அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கியுள்ள துணிவு படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு படம் ரிலீஸ் ஆக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tiktok celebrity gp muthu in ajith vignesh shivan movie ak62 update