/tamil-ie/media/media_files/uploads/2021/03/tiktok-ilakkiya.jpg)
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில், அவருடைய மகள் பாடகி தீ தமிழ் ராப் பாடகர் தெருக்குரல் அறிவு இணைந்து பாடியுள்ள ஆல்பம் பாடல் ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு டிக்டாக் பிரபலம் இலக்கியா அவருடைய ஸ்டைலில் டான்ஸ் ஆடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இன்று இளசுகள் பெருசுகள் என எல்லோராலும் முனுமுனுக்கும் பாடலாக மாறியுள்ளது ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல். இந்த பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் அவருடைய மகள் தீ தமிழ் ராப் பாடகர் தெருக்குரல் அறிவு இணைந்து பாடிய ஆல்பம் ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் வெளியானது. இந்த பாடல் வெளியான நாள் முதல் சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் செம ஹிட் அடித்து வருகிறது. இந்த பாடல், சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்க ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கியுள்ள மாஜா தளத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ளது.
இந்த பாடலால் கவரப்பட்ட பல பிரபலங்கள், ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு அவரவர் ஸ்டைலில் நடனம் ஆடி வருகின்றனர். சமீபத்தில் ராஜா ராணி சீரியல் நடிகை ஆல்யா மானசா ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு நடனமாடினார். இப்படி பிரபலங்கள், நெட்டிசன்கள், ரசிகர்கள் என பலரும் ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில், டிக்டாக் பிரபலமான இலக்கியா ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு அவரது பாணியில் நடனம் ஆடியுள்ளார். இலக்கியாவின் ‘என்ஜாய் எஞ்சாமி’ நடனத்தைப் பார்த்த நெட்டிசன்கள் இந்த பாட்டுக்கு அதே கவர்ச்சிதானா என்று கேட்டு கம்மெண்ட் செய்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.