Advertisment

டிக் டாக் தடைக்குப் பிறகு வீழ்ந்து எழுந்த ஜி.பி.முத்து: 'முதல் கார் வாங்கிவிட்டதாக' நெகிழ்ச்சி வீடியோ

Tiktok famous gp muthu bought a car : டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து second handed car ஒன்றை வாங்கியுள்ளார்.

author-image
WebDesk
Apr 15, 2021 11:46 IST
டிக் டாக் தடைக்குப் பிறகு வீழ்ந்து எழுந்த ஜி.பி.முத்து: 'முதல் கார் வாங்கிவிட்டதாக' நெகிழ்ச்சி வீடியோ

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து. இவர் பழைய கதவு, ஜன்னல் உள்ளிட்டவைகளை வாங்கி அதனை பழுது நீக்கி விற்பனை செய்யும் மரக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர்."டிக்டாக் நண்பர்களே” என்ற வார்த்தையை கேட்டதும் ரசிகர்களுக்கும் நினைவிற்கு வருவது இந்த ஜி பி முத்து தான்.இவரது நெல்லைப் பேச்சுக்கும், நையாண்டியாகப் பதிவேற்றும் வீடியோவிற்கும் என்று டிக்டாக்கில் ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது.

Advertisment

டிக் டாக் தடை செய்யப்பட்ட பிறகு ஜி பி முத்து இன்ஸ்டாகிராம் மற்றும் அவர் தனியாக ஆரம்பித்திருக்கும் யூடுயூப் சேனலில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அதிலும் இவரது யூடுயூப்சேனலில் இவர் பதிவிடும் வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. யூடுயூப்பில் இவருக்கு மூன்று லட்சத்திற்கும் அதிகமான subscribers உள்ளனர். இவர் தனக்கு வரும் லெட்டர்களை படித்து காண்பித்தும், அதற்கு பதில் கொடுக்கும் விதங்களும் மிகவும் வேடிக்கையாக இருக்கும். இவரது வீடியோகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவும் கிடைத்து வருகிறது.

அதுமட்டுமில்லாமல் ஜிபி முத்து தனியார் தொலைக்காட்சி காமெடி ஷோக்களிலும் தோன்றி தனது ரசிகர்களை சிரிக்க வைத்தார். இவர் திரைப்படங்களிலும் அவர் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது ஜிபி முத்து second handed car ஒன்றை வாங்கியுள்ளார். இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், தனது பரம்பரையிலேயே கார் வாங்கிய முதல் நபர் நான் தான் என ஆனந்த கண்ணீருடன் பதிவிட்டுள்ளார். ஜிபி முத்து கார் வாங்கியுள்ள செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

#Tiktok Gp Muthu #Gp Muthu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment