தமிழ் சினிமாவின் பிரபல பாடகரான டி.எம்.செளந்தரராஜன் பாராட்டிய பாடகர்கள் யார் யார் என்பது குறித்து இப்போது தெரிந்துக் கொள்வோம்.
Advertisment
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகராக கொடி கட்டிப் பறந்தவர் டி.எம்.செளந்தரராஜன். எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களின் ஆஸ்தான பாடகராக இருந்தவர். 10000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர்.
இந்தநிலையில், டி.எம்.எஸ் தனக்கு பிடித்த பாடகர்களாக சிலரை கூறியிருப்பதாக வாவ் தமிழா யூடியூப் சேனலில் வெளியான வீடியோவில் கூறப்பட்டுள்ளது.
டி.எம்.எஸ்-க்கு எஸ்.பி.பி-யை ரொம்ப பிடிக்கும். ஆனால் குறிப்பாக எங்கும் சொன்னதில்லை. மலேசியா வாசுதேவனை பற்றி அடிக்கடி சொல்வார். ’ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு’ பாடலை ரொம்ப அழகாக பாடியிருப்பதாக கூறுவார். மேலும் மலேசியா வாசுதேவன் குரலில் மிடுக்கு, கம்பீரம் இருப்பதாகவும், தமிழ் உச்சரிப்பு சரியாக இருப்பதாகவும் பாராட்டியுள்ளார்.
அடுத்ததாக இசையமைப்பாளரும் பாடகருமான எஸ்.ஏ ராஜ்குமாரின் குரல் டி.எம்.எஸ்-க்கு பிடிக்கும். சீர்காழி கோவிந்தராஜன் குரலை ரொம்ப பிடிக்கும். சீர்காழி கோவிந்தராஜன் பாடலை டி.எம்.எஸ் ரசித்து கேட்பார். அவரைப் போல் என்னால் பாட முடியாது என்று சொல்லியிருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“