Trisha backs out of Vijay’s Leo? தளபதி 67 படத்தில் இருந்து த்ரிஷா விலகல் : உண்மை நிலவரம் என்ன? | Indian Express Tamil

தளபதி 67 படத்தில் இருந்து த்ரிஷா விலகல்? : உண்மை நிலவரம் என்ன?

த்ரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணனும் த்ரிஷா லியோ படத்தில் இருந்து விலகுவதாக வெளியான வதந்திகளை மறுத்துள்ளார்.

தளபதி 67 படத்தில் இருந்து த்ரிஷா விலகல்? : உண்மை நிலவரம் என்ன?

தளபதி 67 லியோ படத்தில் இருந்து நடிகை த்ரிஷா வெளியேறிவிட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாரிசு படத்திற்கு பிறகு தளபதி விஜய் தற்போது தனது 67-வது படமாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், கவுதம் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகான், மிஷ்கின் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த படத்தில் நடிகை த்ரிஷா நாயகியாக நடிக்க ஒப்பந்தமானார். இதனைத் தொடர்ந்து படக்குழு காஷ்மீர் சென்றது.

இதனிடையே காஷ்மீர் சென்ற ஓரிரு நாட்களில் நடிகை த்ரிஷா சென்னை திரும்பிவிட்டதாக தகவல் வெளியாக நிலையில், அவர் உடல்நலக்குறைவு காரணமாக படத்தில் இருந்து வெளியேறியதாக ஊகங்கள் கூறுகின்றன. காஷ்மீரில் நிலவும் கடுமையான வானிலையில் அவரால் படப்பிடிப்பில் ஈடுபட முடியவில்லை என்று கூறப்படுகிறது. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நடிகை த்ரிஷா வந்திரங்கிய சில போட்டோஸ் வதந்திக்கு முக்கிய காரணமாக உள்ளது.

லியோ படப்பிடிப்பில் தயாரிப்பாளர்கள் காஷ்மீர் படப்பிடிப்பில் இருக்கும் நிலையில், த்ரிஷா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை திரும்பியதாகவும், படத்தில் நடிக்காமல் இருக்கலாம் என்றும் கூறப்பட்டது. ஆனாலும் தரிஷாவின் புதிய இன்ஸ்டாகிராம் பதிவுகள், அவர் லியோ படப்பிடிப்பில் காஷ்மீரில் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். காஷ்மீரை அதன் இருப்பிடமாகக் குறிக்கும் விமானத்தில் இருந்து ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார். இதனால் த்ரிஷா ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

அதற்கு மேல், த்ரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன், ஜெயா பிளஸ் என்ற தமிழ் சேனலுக்கு அளித்த பேட்டியில், திரிஷா இன்னும் படத்தின் ஒரு பகுதியாக இருப்பதாகவும், வதந்திகள் ஆதாரமற்றவை என்றும் உறுதிப்படுத்தினார். இதன் மூலம் த்ரிஷா தளபதி 67 படத்தில் இருந்து த்ரிஷா விலகிவிட்டதாக வெளியான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

விஜய்யும் த்ரிஷாவும்,  கில்லி, திருப்பாச்சி போன்ற பிளாக்பஸ்டர் படங்களில் இணைந்து நடித்துள்ளனர். வெற்றிகரமான ஜோடி 2008 இல் வெளியான குருவி திரைப்படத்திற்குப் பிறகு தற்போது, ​​14 வருட இடைவெளிக்குப் பிறகு, இருவரும் லியோ படத்தில் இணைந்துள்ளனர். ஏற்கனவே கமல்ஹாசனின் விக்ரம் மற்றும் கார்த்தியின் கத்தி உள்ளிட்ட லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியாக இது இருக்கும் என்று ரசிகர்கள் ஊகித்து வருவதால் லியோவும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மேலும் லியோவின் புதிய ப்ரோமோவுக்கும் விக்ரமின் ப்ரோமோவுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதால் படத்தைச் சுற்றியுள்ள பரபரப்பு மேலும் அதிகரித்துள்ளது. இப்படத்தில் விஜய் த்ரிஷா, சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின் மற்றும் பிரியா ஆனந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக இணைந்துள்ள மாஸ்டர் படத்திற்கு இசையமைத்த அனிருத் ரவிச்சந்தர், லியோ படத்துக்கு இசையமைக்க உள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tmail cinema actress trisha backs out of vijays leo heres what we know