TN Assembly Election Awareness Poster : தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மாவட்ட ஆட்சியரின் தேர்தல் விழிப்புணர்வு போஸ்டர் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்காக ஒருபுறம் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தல் ஈடுபட்டு வரும் நிலையில், மறுபுறம் மக்களுக்கு தேர்தல் பற்றிய விழிப்புணர்வை ஏற்பட்டுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், மக்களுக்கு தேர்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தம் விதமாக, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன், வலிமை படத்தை பயன்படுத்தி ட்விட் செய்திருந்தார். வலிமை படத்தின் அப்டேட் கிடைக்காமல் தவித்து வந்த அஜித் ரசிகர்களுக்கு ஆட்சியரின் இந்த பதிவு பெரும் மகிழ்ச்சியை அளித்தது.
ஆனாலும் இந்த பதிவு அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுவாக அனைத்து தரப்பினரிடமும் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது ஆட்சியர் விஜயகார்த்திகேயன், சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்தை கையில் எடுத்துள்ளார். டாக்டர் பட அப்டேட் என்று கூறி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சிவகார்த்திகேயன் முக்கவசம் அணிந்திருக்கும் புகைப்படத்துடன், முகக்கவசம் அணிந்து வாக்களிக்க வாருங்கள் - டாக்டர்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விழிப்புணர்வு போஸ்டர் சிவகார்த்திகேயன் ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.
இந்த போஸ்டர் குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன் மாவட்ட ஆட்சியரின் ட்வீட்டை மேற்கோள்காட்டி “உண்மையிலேயே இது மிகவும் பொறுப்பான செயல். இதில் நானும் உங்களுடன் சேர்ந்து கொள்கிறேன். தயவு செய்து அனைவரும் வாக்களிக்க செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்லுங்கள்” என்று குறிப்பிட்டார். சிவகார்த்திகேயனின் பதிவுக்கு பதிலளித்துள்ள ஆட்சியர் விஜயகார்த்திகேயன், “அதான் டாக்டரே சொல்லிட்டாரே. நாம் அனைவரும் மாஸ்க் அணிந்து செல்வோம்” என்று கூறியுள்ளார். இந்த பதிவுகள் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"