நயன்தாரா- விக்னேஷ் சிவன் வாடகை தாய் பிரச்னை: தமிழக அரசு முக்கிய அறிக்கை வெளியிடுவதாக அறிவிப்பு
வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் சட்ட விதிமுறைகள் தமிழக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை தமிழக அரசு கண்காணிக்கின்றதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டது தொடர்பாக நாளை மாலை அறிக்கை வெளியிடப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துளளார்.
Advertisment
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிக்கு கடந்த ஜூன் மாதம் 9-ந் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் திருமணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருமணத்திற்கு பிந்தைய நிகழ்வுகள் தொடர்பாக பிஸியாக இருந்த தம்பதி அதன்பிறகு தங்களது பணிகளில் பிஸியாகினர்.
இதில் நயன்தாரா சிரஞ்சீவி நடித்து வரும் காட்ஃபாதர் படத்திலும் விக்னேஷ் சிவன் அடுத்து தான் இயக்கவுள்ள அஜித் படத்தின் கதை விவாரத்திலும் பிஸியாக இருந்து வந்தனர். இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி தங்கள் அப்பா அம்மா ஆகிவிட்டதாகவும், தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாகவும் திடீர் அறிவிப்பை வெளியிட்டனர்.
திருமணமாகி 4 மாதங்களில் குழந்தை பிறந்துவிட்டதா என்று பலரும் ஆச்சரியமாக கேட்டு வந்தாலும், ரசிகர்கள் தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆனாலும் 4 மாதங்களில் எப்படி குழந்தை பிறந்தது என்ற விவாதம் தொடர்ந்து வந்த நிலையில் விக்கி நயன் தம்பதி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதாக தகவல் வெளியானது.
ஆனால் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல சட்ட விதிகள் உள்ள நிலையில், நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுககொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் சட்ட விதிமுறைகள் தமிழக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை தமிழக அரசு கண்காணிக்கின்றதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதனிடையே நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னரே பதிவுத்திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியானது. இந்த விவகாரத்தில் சர்ச்சை இன்னும் தொடர்ந்து வரும் நிலையில், சென்னை சூளைமேடு பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனை குறித்து தனியார் தொலைக்காட்சியில் வெளியான செய்தி மற்றும் நயன்தாரா விக்னேஷ் சிவன் விவகாரம் குறித்தும் நாளை மாலை அறிக்கை வெளியிடப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“