scorecardresearch

வாக்காளர்களிடம் மன்னிப்பு கேட்டாரா விஜய் ? இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Actor vijay asks sorry to Public? Video goes viral in social medias Tamil News: நடிகர் விஜய் வாக்குசாவடியில் இருந்த வாக்காளர்களிடம் மன்னிப்பு கேட்டார் என்பது போன்ற வீடியோ அதிகம் பகிரப்பட்டு தற்போது இணையம் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

TN local body polls Tamil News: Actor vijay asks sorry to Public? at election booth video goes viral

Actor Vijay Tamil News: தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று ஒரேகட்டமாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் நடந்து வரும் இந்த வாக்குப்பதிவில் பொதுமக்களும், பிரபலங்களும் தங்கள் வாக்கை பதிவு செய்து வருகின்றனர். சில இடங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்றும் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

ஜனநாயக கடமையை ஆற்றிய நடிகர் விஜய்

இந்நிலையில், தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு காரில் வந்து தனது வாக்கை பதிவு செய்தார். காலை 7 மணிக்கே வாக்குச்சாவடிக்கு வந்த அவரைக் காண அப்பகுதியில் அவரது ரசிகர்கள் கூட்டமாக குவிந்தனர். இதனால் வாக்குச்சாவடி இருந்த பகுதியில் நெரிசல் ஏற்பட்டது.

வாக்காளர்களிடம் மன்னிப்பு கேட்டாரா விஜய்?

நடிகர் விஜய் தனது வாக்கை செலுத்த வந்த தனியாக வாக்குச்சாவடி வந்தார். அப்போது அங்கு போலீஸ் பாதுகாப்பு அமைக்கப்பட்டிருந்தது. அவர் வாக்குச்சாவடியில் நுழைந்த நேரத்தில் இருவர் மட்டுமே வாக்கு செலுத்த இருந்தனர். அதில் மூதாட்டி ஒருவர் விஜய்க்கு வணக்கம் தெரிவிதத்தர். பதிலுக்கு விஜய்யும் புன்னகைத்து மூதாட்டிக்கு வணக்கம் தெரிவித்தார்.

இந்நிலையில், நடிகர் விஜய் வாக்குசாவடியில் இருந்த வாக்காளர்களிடம் மன்னிப்பு கேட்டார் என்பது போன்ற வீடியோ அதிகம் பகிரப்பட்டு தற்போது இணையம் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் வாக்குசாவடிக்கு வாக்களிக்க வந்த நேரத்தில் அங்கு இரண்டு பேர் மட்டுமே நின்று இருந்தார்கள், அவர்கள் வணக்கம் தெரிவிக்க அவர்களுக்கு விஜய்யும் வணக்கம் தெரிவித்தார். மற்றபடி அவர் எந்த ஒரு மன்னிப்பையும் கேட்கவில்லை என அங்கிருந்தவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். மேலும், சமூக வலைதளங்களில் பரப்பட்டு வதந்திகள் போல் அங்கு எந்தவொரு நிகழ்வும் நடக்கவில்லை என்றும் கூறியுள்ளார்கள்.

நடிகர் விஜய் வாக்குசாவடிக்குள் வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வந்தன. இந்த வீடியோவில் அவர் அங்கிருந்த வாக்காளர்களிடம் மன்னிப்பு கேட்கிறார் என்று சிலர் தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இன்று பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 22-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tn local body polls tamil news actor vijay asks sorry to public at election booth video goes viral

Best of Express